Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாமகவில் இருந்து விலகி மக்கள் நீதி மய்யத்தில் சரண்: அதிர்ச்சியில் ராமதாஸ்?

Webdunia
சனி, 23 பிப்ரவரி 2019 (18:43 IST)
திராவிட கட்சிகளை கடுமையக விமர்சித்து வந்த பாமக 2019 நாடளுமன்ற தேர்தலுக்காக அதிமுகவுடன் கூட்டனி வைத்துள்ளது. இந்த கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒரு எம்பி சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. 
 
பாமக அதிமுகவுடன் இணைந்தது கடும் கேலிக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளானது. இதனால் அக்கட்சியில் உள்ள முக்கிய பொறுப்புகளில் உள்ள பலரிடையே பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்நிலையில், இந்த கூட்டணி உறுதியானதும் பாமக இளைஞர் அணி மாநில செயலாளராக இருந்த ராஜேஷ்வரி, பாமகவில் இருந்து விலகினார். தற்போது இவர் கமலின் மக்கள் நீதி மய்யத்தில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியானது. 
இதற்கு அவர், என்னுடைய இந்த தைரியமான முடிவை பல கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக அண்ணன் சீமான் இந்த முடிவுக்கு வாழ்த்து தெரிவித்து மெசேஜ் அனுப்பியிருந்தார். 
 
தினகரன் தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் வந்தன. அதேபோல்தான் மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக கமல்ஹாசன் என்னுடைய இந்த முடிவுக்கு வாழ்த்து தெரிவித்து, நேரில் சந்திக்க விரும்புவதாகத் தெரிவித்திருந்தார். 
 
அதற்காகத்தான் அவரை சந்திக்க உள்ளேன். அதை தவிர கட்சியில் சேருவது பற்றி எல்லாம் எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை என தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹஜ் புனித பயணம் சென்ற 98 இந்தியர்கள் பலி..! மத்திய அரசு தகவல்..!!

டாஸ்மாக் வருமானம் அதிகரிப்பு..! கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ரூ. 1, 734 கோடி உயர்வு..!

கள்ளக்குறிச்சி சென்ற சாட்டை துரைமுருகனுக்கு அடி உதை.. அதிர்ச்சியில் நாம் தமிழர் கட்சியினர்..!

கள்ளச்சாராயம் உயிரிழப்பு அதிகரித்தது ஏன்? – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!

இந்தியாவில் உருவான ஓநாய் - நாய் கலப்பின விலங்கு: இதனால் ஏற்படப்போகும் விளைவுகள்

அடுத்த கட்டுரையில்
Show comments