Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாமக பிரமுகர் காடுவெட்டி குரு கவலைக்கிடம்

Webdunia
வெள்ளி, 25 மே 2018 (17:27 IST)
பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய பிரமுகரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான காடுவெட்டி குரு கடந்த சில நாட்களாக உடல்நலமின்றி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
 
பாமக இளைஞரணி தலைவரும் எம்பியுமான டாக்டர் அன்புமணி தினமும் அப்பல்லோ மருத்துவமனைக்கு நேரில் சென்று காடுவெட்டி குருவின் உடல்நிலை குறித்து மருத்துவரிடம் அறிந்து வருகிறார்.
 
காடுவெட்டி குரு அவர்களுக்கு சுவாச பிரச்சனை இருந்ததால் அவருக்கு அறுவை சிகிச்சை சமீபத்தில் செய்யப்பட்டதாகவும், அறுவை சிகிச்சைக்க்கு பின்னர் அவரது உடல்நிலை தேறி வந்த நிலையில் திடீரென அவரது உடல் கவலைக்கிடமாக இருப்பதாகவும் அப்பல்லோ மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன
 
காடுவெட்டி குருவின் உடல்நிலை குறித்து பாமகவினர் கூறியபோது, ' காடுவெட்டி குருவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வந்தது. தற்போது அவரது உடல் நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. மருத்துவர்கள் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்" என்று கூறினர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமைச்சர்கள் பெரிய கருப்பன், எஸ்.எஸ்.சிவசங்கர் மீதான வழக்குகள்: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மின்சார ரயிலில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவர் உயிரிழப்பு.. 20 வயதில் சோகம்..!

சென்னையில் 3 இடங்களில் விபத்து நடைபெறும்.. மிரட்டல் விடுத்த ஆந்திர இளைஞர் கைது..!

‘ரூ’ மட்டும் போட்டால் போதுமா? தமிழை பயிற்றுமொழியாக்க சட்டம் இயற்றுங்கள்: ராமதாஸ்

மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டண சலுகை: விஜய்வசந்த் எம்.பி. ஒத்திவைப்பு தீர்மானம்

அடுத்த கட்டுரையில்
Show comments