Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாமகவுக்கு 10 தொகுதிகள், நோ மாநிலங்களவை.. ஒப்பந்தம் கையெழுத்து..!

Mahendran
செவ்வாய், 19 மார்ச் 2024 (11:18 IST)
பாஜக கூட்டணியில் பாமக இணைவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது இரு தரப்பிற்கும் இடையே ஒப்பந்தம் ஆனதாக தகவல் வெளியாகி உள்ளது.

அண்ணாமலை மற்றும் டாக்டர் ராமதாஸ் இடையே நடந்த ஒப்பந்தத்தில் பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10 தொகுதிகள் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் மாநிலங்களவை தொகுதி குறித்து எந்தவிதமான அறிவிப்பும் ஒப்பந்தத்தில் இல்லை என்றும் தேர்தலுக்குப் பின் மாநிலங்களவை தேர்தலுக்குப் பின் பாமகவுக்கு கொடுக்கப்பட்ட 10 தொகுதிகளில் நல்ல வெற்றி பெற்றால் அதன் பின் மாநிலங்களவை தொகுதி கொடுப்பது குறித்து பின்னால் பேசிக் கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

இந்த நிலையில் பாமகவுக்கு ஒதுக்கப்பட்ட 10 தொகுதிகள் என்னென்ன என்பதை குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பாஜக கூட்டணியில் பாமக இணைந்தது உறுதி செய்யப்பட்டு விட்டது. விரைவில் பாஜகவுடன் ஒப்பந்தம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 நாட்களில் 2000 ரூபாய் குறைந்த தங்கம் விலை.. பொதுமக்கள் மகிழ்ச்சி..!

டிக் டாக் செயலி விவகாரத்தில் திடீர் திருப்பம்.. டிரம்ப் பிறப்பித்த உத்தரவு..!

சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு தடை.. என்ன காரணம்?

பிரதமர் வருகை எதிரொலி: ராமேஸ்வரத்தில் நாளை பொது தரிசனம் ரத்து..!

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

அடுத்த கட்டுரையில்
Show comments