Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திமுக தலைவருக்கு இதைத்தவிர வேறு எதுவும் தெரியாது: அன்புமணி

Advertiesment
திமுக தலைவருக்கு இதைத்தவிர வேறு எதுவும் தெரியாது: அன்புமணி
, செவ்வாய், 18 பிப்ரவரி 2020 (07:26 IST)

‘தி.மு.க.தலைவர் மு.க,ஸ்டாலின், பொது மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாகவும், அதன் மூலம் ஆதாயஅரசியல் செய்வதாகவும் பாமக இளைஞரணி தலைவரும் ராஜ்யசபா எம்பியுமான அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து பேட்டி ஒன்றில் அவர் மேலும் கூறியதாவது: ‘தி.மு.க.தலைவர் மு.க,ஸ்டாலின் அவர்களுக்கு வேறு எதுவும் தெரியவில்லை. அதுதான் பிரச்சனை. மக்களைத் தூண்டி ஏதோ இரண்டு கோடி கையெழுத்து என்று மக்களை எல்லாம் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். மக்களை திசை திருப்பி இதுபோன்ற போராட்டங்களைத் தூண்டிவிட்டு இதில் திட்டமிட்டு வன்முறைகளை தூண்டி தி.மு.க போன்ற கட்சிகள் மறைமுகமாக அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு விவசாயி முதல்-அமைச்சர் விவசாயிகளுடைய கஷ்டங்களை புரிந்து காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட டெல்டா மண்டலமாக அறிவித்ததற்கு மகிழ்ச்சி. தமிழ்நாட்டில் 20 நீர் மேலாண்மை பிரச்சினை இருக்கிறது. இதற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து திட்டங்களை எல்லாம் நிறைவேற்றி நாம் எதிர்கொள்ளும் மிக மோசமான காலநிலை மாற்றங்களை தடுத்து நிறுத்த வேண்டும். அதற்கு தயார் நிலையில் இது போன்ற வேளாண் சார்ந்த நீர் மேலாண்மை திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். முதலமைச்சருக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்’ இவ்வாறு அன்புமணி தெரிவித்தார்


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

Coronavirus News: ஒரு சொகுசு கப்பல், 2 விமானங்கள், 100 மரணங்கள், 2000 ஐ- ஃபோன்கள் -