Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் தமிழகத்திற்கு வருவது உறுதி..! – பாஜக பொது செயலாளர் சி.டி.ரவி தகவல்!

Webdunia
வியாழன், 6 ஜனவரி 2022 (13:44 IST)
தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடி தமிழகம் வருவது உறுதி என பாஜக தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஜனவரி 12 அன்று தமிழகத்தில் மருத்துவ கல்லூரிகள் திறந்து வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளார். தொடர்ந்து மதுரையில் பாஜகவினர் நடத்தும் “மோடி பொங்கல்” விழாவிலும், புதுச்சேரியில் நடைபெறும் விழா ஒன்றிலும் அவர் கலந்து கொள்ள உள்ளார்.

இந்நிலையில் தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் தீவிரமடைந்து வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பிரதமர் மோடி தமிழகம் வரும் நிகழ்ச்சி ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் இதுகுறித்து பேசிய பாஜக தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி, தமிழகத்தில் திட்டமிட்டபடி 12ம் தேதி பிரதமரின் நிகழ்ச்சிகள் நடைபெறும். தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை பின்பற்றி நிகழ்ச்சி நடக்கும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாத்மா காந்தி பாகிஸ்தானுக்கு தான் தேசத் தந்தை: பிரபல பாடகர் சர்ச்சை கருத்து..!

ஷேக் ஹசீனாவை எங்களிடம் ஒப்படையுங்கள்: இந்தியாவுக்கு கடிதம் எழுதிய வங்கதேச அரசு..!

மருத்துவ கழிவு கொட்டிய விவகாரம்: மாநில அரசை விளாசிய கேரள உயர்நீதிமன்றம்..!

BSNL நிறுவனத்திற்கு நிலுவைத்தொகை இல்லையா? அமைச்சரின் கருத்துக்கு அண்ணாமலை பதிலடி

தமிழகத்தில் டிசம்பர் இறுதி வரை மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments