Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் மோடி வருகை; புதுச்சேரியில் 144 தடை உத்தரவு!

Webdunia
திங்கள், 29 மார்ச் 2021 (17:26 IST)
தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநில சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் மோடி நாளை புதுச்சேரி வருகிறார்.

தமிழகம், புதுச்சேரி, கேரளா மாநிலங்களில் ஒரே நாளில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதால் தேர்தல் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாஜக – அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் நிலையில் பாஜக மேல் தலைவர்கள் பலர் தேர்தல் பிரச்சாரத்திற்காக அடிக்கடி தமிழகம், புதுச்சேரி பயணித்து வருகின்றனர்.

இந்நிலையில் நாளை புதுச்சேரியில் பாஜகவிற்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க பிரதமர் மோடி வருகை தர உள்ளார். பின்னர் அதே நாளில் அங்கிருந்து தமிழகம் வரும் அவர் தாராபுரத்தில் எல்.முருகனுக்கு ஆதரவாகவும் வாக்கு சேகரிக்க உள்ளார். இதற்காக புதுச்சேரிக்கு அவர் நாளை வர உள்ளதால் புதுச்சேரியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், வானத்தில் விமானங்கள் உள்ளிட்டவை பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பக்தர்கள் கவனத்திற்கு.! திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கணுமா..! ஆன்லைனில் நாளை டிக்கெட்..!

வங்கதேசத்தில் ஒரே ஐஎம்இஐ எண் கொண்ட ஒன்றரை லட்சம் மொபைல் ஃபோன்கள் - மோசடியின் பின்னணி என்ன?

மேகதாது அணை விவகாரம்.! மத்திய அமைச்சருக்கு ராமதாஸ் கண்டனம்..!!

தமிழகத்தில் இன்னொரு இடைத்தேர்தலா? லால்குடி எம்.எல்.ஏ ராஜினாமா செய்ய போவதாக தகவல்..!

தோல்வி பயத்தால் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு..! அதிமுகவை விளாசிய ஆர்.எஸ் பாரதி.!!

அடுத்த கட்டுரையில்
Show comments