Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருணாநிதியின் இறுதி அஞ்சலி - சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி

Webdunia
புதன், 8 ஆகஸ்ட் 2018 (10:31 IST)
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்த இந்திய பிரதமர் மோடி, சென்னை வந்துள்ளார்.
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கலைஞர் கருணாநிதி சிகிச்சை பலனின்றி நேற்று மாலை மரணமடைந்தார். அவரின் மரணம் திமுக தொண்டர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.
 
அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் தொடர்ச்சியாக அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த இந்திய பிரதமர் மோடி, சென்னை வந்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம், தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் மோடியை வரவேற்றனர்.
 
இன்னும் சற்று நேரத்தில் ராஜாஜி ஹாலுக்கு வருகை தரும் மோடி, கருணாநிதிக்கு இறுதி அஞ்சலி செலுத்துகிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஊட்டி, கொடைக்கானல் செல்ல ஏப்ரல் 1 முதல் கட்டுப்பாடு: சென்னை ஐகோர்ட் உத்தரவு..!

தமிழர்கள் மீது வன்மம் கொண்டவர்களுக்கு ‘ரூ' பிடிக்காது: செல்வபெருந்தகை..!

19 மாவட்டங்களுக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம். தவெக தலைவர் விஜய் அறிவிப்பு..!

நிறுவப்பட்ட இரண்டே நாட்களில் திருட்டு போன அம்பேத்கர் சிலை.. தீவிர விசாரணை..!

ஏர்டெல், ஜியோவுடன் ஸ்டார்லிங்க் கூட்டு.. காரணம் பிரதமர் மோடி தான்..காங்கிரஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments