Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சோகத்தில் முடிந்த குழாயடி சண்டை..! பெண் பலி.. தாய், மகள் கைது! – சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!

Prasanth Karthick
வெள்ளி, 23 பிப்ரவரி 2024 (08:48 IST)
சென்னை வண்ணாரப்பேட்டையில் குழாயடியில் ஏற்பட்ட சண்டையின் தொடர்ச்சியாக பெண் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் முனியம்மாள். அதே பகுதியில் சங்கர் என்பவரும், அவரது மனைவி சாந்தியும் வாழ்ந்து வருகின்றனர்.

நேற்று முன் தினம் சாந்தி மற்றும் அவரது மகள் இருவரும் குழாயடியில் தண்ணீர் பிடித்து குடத்தை முனியம்மாள் வீட்டு வாசல் முன்பு வைத்துள்ளனர். இதனால் முனியம்மாளுக்கும், சாந்திக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வார்த்தைகள் எல்லை மீறி கைகலப்பாக மாறிய இந்த சம்பவத்தில் முனியம்மாளை சாந்தியும், அவரது மகளும் சேர்ந்து தாக்கியுள்ளனர்.

இதனால் காயமடைந்த முனியம்மாள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பினார். தன்னை தாக்கியது குறித்து சாந்தி மற்றும் அவரது மகள் வள்ளி மீது முனியம்மாள் அன்றே வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகாரும் அளித்திருந்தார்.

ALSO READ: போராடி வரும் விவசாயிகள் மீது தேசப் பாதுகாப்பு சட்டம்: காவல்துறையின் அதிரடி அறிவிப்பு..!

இந்நிலையில் வீடு திரும்பிய முனியம்மாள் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கினார், உடனடியாக அவரை மருத்துவமனை கொண்டு சென்ற நிலையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். முனியம்மாளின் இந்த திடீர் மரணத்திற்கு மாரடைப்புதான் காரணமாக என்பது குறித்து பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

எனினும் முன்னதாக முனியம்மாளை தாக்கிய சாந்தி மற்றும் வள்ளி மீது போலீஸார் கொலைக்குற்றம் இல்லாத மரணம் விளைவித்தல் சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்து கைதும் செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை 10 மாவட்டங்களை வெளுக்க போகும் கனமழை! - வானிலை அலெர்ட்!

மகாராஷ்டிரா: மக்களவைத் தேர்தலில் சரிவு கண்ட பாஜக சட்டமன்ற தேர்தலில் வெற்றி - ஐந்தே மாதங்களில் என்ன நடந்தது?

57 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி.. எதிர்க்கட்சி தலைவர் இல்லாத மகாராஷ்டிரா..!

கனடா கண்ட மோசமான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.. கொதித்தெழுந்த மக்கள்..!

அமெரிக்க தேர்தலை விட இந்திய தேர்தல் மேலானது: எலான் மஸ்க்

அடுத்த கட்டுரையில்
Show comments