Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தொண்டர்கள் மத்தியில் கைவரிசையை காட்டிய பிக்பாக்கெட் நபருக்கு அடி உதை!

Advertiesment
தொண்டர்கள் மத்தியில் கைவரிசையை காட்டிய பிக்பாக்கெட் நபருக்கு அடி உதை!
, திங்கள், 30 ஜூலை 2018 (19:03 IST)
திமுக தலைவர் கருணாநிதி உடல் நலிவால் கடந்த மூன்று நாட்களாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டாலும், தொண்டர்கள் பலர் மருத்துவமனையின் முன்பு குவிந்துள்ளனர். 
 
இந்நிலையில், இந்த சர்தர்ப்பத்தை பயன்படுத்தி பிக்பாக்கெட் நபர் ஒருவர் 20-க்கும் மேற்பட்டோரிடம் செல்போன்கள், பர்ஸுகள், குடை, வாட்ச் ஆகியவற்றை களவாடியுள்ளார். இதில் உச்சகட்டமால ஊடகத்தினரின் காமேரா ஸ்டாண்டுகளையும் களவாடியுள்ளார். 
 
இது குறித்து போலீஸாரிடம் தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், இந்த கும்பலை சேர்ந்த ஒருவரை பிடித்து அடித்து உதைத்து தொண்டர்கள் போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். அவரிடம் மட்டுமிருந்து ரூ.60,000 பணம், செல்போன் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டது. 
 
இதன் பின்னர் போலீஸார் தொண்டர்கள் அனைவரையும் தங்களது உடமைகளை பத்திரமாக வைத்திருக்கும் படி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கீ.வீரமணி வேண்டுகோளையும் மீறி பிரார்த்தனை செய்து வரும் திமுக தொண்டர்கள்