Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாகனங்களின் கண்ணாடிகளில் அரசியல் கட்சி தலைவர்களின் படங்கள் ஒட்ட தடை: பொதுநல மனு

Siva
வியாழன், 9 மே 2024 (13:14 IST)
வாகனங்களில் உள்ள   நம்பர் பிளேட்டுகளில் எண்கள் தவிர வேறு எதையும் எழுத தடை செய்யப்பட்டது என்பதும் இதனை அடுத்து காவல்துறையினர் இந்த விதிகளை மீறுபவர் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் அடுத்த கட்டமாக வாகனங்களில் அரசியல் கட்சி தலைவர்கள், மத அடையாளங்கள் உள்ளிட்ட புகைப்படங்கள் ஓட்ட தடை விதிக்க வேண்டும் என்று பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட விதிக்கப்பட்ட தடையை மாநிலம் முழுவதும் அமல்படுத்தக் கோரி மனுதாக்கல் செய்துள்ள நிலையில் கார்களில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டுமெனவும் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
சென்னையை சேர்ந்த தேவதாஸ் காந்தி வில்சன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல வழக்கில் வாகனங்களின் கண்ணாடிகளில் மத சின்னங்கள், அரசியல் கட்சி தலைவர்களின் படங்களை ஒட்ட தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.
 
இதனையடுத்து இந்த மனுவுக்க்கு தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

ஹாலிவுட்டை எரித்த காட்டுத்தீ! வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!

சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.. திருப்பதி சம்பவம் குறித்து ரோஜா..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லையா? திமுக vs நாதக?

அடுத்த கட்டுரையில்
Show comments