சென்னை பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு: நள்ளிரவில் பயங்கரம்!
சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் மர்ம நபர்கள் திடீரென பெட்ரோல் குண்டு வீசி விட்டுச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
சென்னை தி நகர் பகுதியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்
நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் யாருக்கும் எந்தவித சேதமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கதவு அலுவலகத்தின் சாத்தப்பட்டிருந்ததால் பெரிய சேதம் இல்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருப்பினும் பாஜக தலைமை அலுவலகத்தில் குண்டு வீசப்பட்டது அக்கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்
மேலும் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளதால் பதட்ட நிலை காணப்படுகிறது