Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாடு ஆளுநர் ஆன்.என்.ரவியை பதவி நீக்கம் செய்யக் கோரி நீதிமன்றத்தில் மனு

Webdunia
செவ்வாய், 29 நவம்பர் 2022 (13:24 IST)
தமிழ்நாடு ஆளுநர் ஆன்.என்.ரவியை பதவி நீக்கம் செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆன்லைன் ரம்மி விளையாட்டினால் மக்கள் பலர் பாதிக்கப்பட்டு,  பண நெருக்கடியால், உயிரை மாய்த்துக் கொள்ளுவது அதிகரித்து வந்த நிலையில்,இதற்கு தடை விதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து குரல் எழுப்பி வந்தனர்.

இதையடுத்து, கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி தமிழ் நாடு சட்டப்பேரவையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை நிறைவேற்றியது.

இந்த  நிலையில், ஆன்லைன் ரம்மி தடை மசோதா குறித்து, விளக்கம் கேட்டு, தமிழக அரசிற்கு கடந்த 24 ஆம் தேதி  ஆளுனர் ஆர்.என்.ரவி கடிதம் அனுப்பியிருந்தார்.

இந்த சட்ட மசோதாவின் காலம் வரும் நவம்பர் 27 ஆம் தேதியுடன் முடிவடைவிருந்த  நிலையில்,  தமிழக அரசு அதற்கு விளக்கம் கொடுத்தது. ஆனால் ஆளுநர் இன்னும் அந்த விளக்கத்திற்குப்  பிறகு ஒப்புதல் அளிக்காததால் மசோதா காலாவதியாகிவிட்டது.

 ALSO READ: ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் சட்டத்திற்கு தமிழக ஆளுனர் ஒப்புதல்

இது ஆளும் கட்சியாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதால், ஆளுனர் பதவி குறித்து விமர்சித்து வந்தனர்.

இந்த  நிலையில்,  தமிழ் நாடு ஆளு நர் பதவியை பதவி நீக்கம்  செய்ய தந்தை பெரியார் திராவிடர் கழக காஞ்சி மாவட்ட செயலாளர் கண்ணதாசன் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில், பதவி ஏற்ற நாளில் இருந்தே சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 18 ஆம் தேதி தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றது குறிப்பிடத்தக்கது.

 
Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மருத்துவமனைக்குள் நுழைந்து பெண் டாக்டர் மீது தாக்குதல் நடத்தியவர் கைது: குடும்ப சண்டையா?

சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே மெமு ஏ.சி. ரயில்: தெற்கு ரயில்வே தகவல்..!

ஃபெங்கல் புயல்: இன்றும் நாளையும் அதி கனமழை: 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!

இசைவாணி மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? நடிகை கஸ்தூரியின் பதில்

ரூட்டை மாற்றிய புயல்.. சென்னை பக்கம் திரும்புகிறதா? இன்னும் என்னவெல்லாம் பண்ணப் போகுதோ! - குழப்பத்தில் மக்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments