Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் கொரோனா இல்லாத முதல் மாவட்டம்!

Webdunia
செவ்வாய், 17 நவம்பர் 2020 (12:26 IST)
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வந்தது. முதலில் இரட்டை இலக்கங்களிலும், அதன்பின்னர் மூன்று இலக்கங்களிலும், இருந்த தினசரி கொரோனா பாதிப்பு அதன் பின்னர் 5 ஆயிரத்தை தாண்டி ஒரு கட்டத்தில் 10 ஆயிரத்தை நெருங்கியது என்பது குறிப்பிடத்தக்கது 
 
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வந்தது. இந்த நிலையில் தமிழக அரசின் சுகாதாரத்துறை எடுத்த அதிரடி நடவடிக்கையின் காரணமாக கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைய தொடங்கியது. தற்போது தினமும் 2 ஆயிரத்துக்கும் குறைவான கொரோனா பாதிப்புக்களே உள்ளன என்பதும் பலி எண்ணிக்கையும் வெகுவாக குறைந்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் பொதுமக்களுக்கு ஒரு நல்ல செய்தியாக முதல் முறையாக தமிழகத்தில் கொரோனா இல்லாத மாவட்டமாக பெரம்பலூர் மாவட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 2,228 பேர்களும் குணமாகி வீடு திரும்பி திரும்பி விட்டனர் என்பதும் நேற்று இம்மாவட்டத்தில் ஒருவர்கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இதனை அடுத்து தமிழகத்தில் கொரோனா அல்லாத முதல் மாவட்டமாக பெரம்பலூர் மாவட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது இதேபோல் மற்ற மாவட்டங்களில் விரைவில் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறும் என்றும் தமிழகமே கூடிய விரைவில் கொரோனாவில் இருந்து விடுதலை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் உச்சம் செல்லும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 240 ரூபாய் உயர்வு..!

எக்கமா.. எக்கச்சக்கமா..! பொங்கலையொட்டி விண்ணை தொட்ட விமான டிக்கெட் விலை!

ஆட்டோ கட்டணம் உயர்வு.. தொழிற்சங்கத்தினர் அறிவிப்பை தமிழக அரசு ஆதரிக்குமா?

சென்னை அண்ணா சாலை ஜிபி சாலை சந்திப்பில் U திருப்பம்: போக்குவரத்து போலீசார் நடவடிக்கை!

விசிக, நாம் தமிழர் கட்சிக்கு மாநில கட்சிகள் அங்கீகாரம்: இந்திய தேர்தல் ஆணையம்!

அடுத்த கட்டுரையில்
Show comments