Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

''மக்களுடன்முதல்வர் திட்டம்!'-முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Advertiesment
cm stailn
, வெள்ளி, 15 டிசம்பர் 2023 (12:50 IST)
தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நடந்து வரும் நிலையில், மக்களுக்குப் பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், புதிய திட்டமாக மக்களுடன் முதல்வர் திட்டம் உருப்பெறுவதாகவும், இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைக்கத் திங்களன்று கோவைக்கு வருகிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது:

''உங்களில் ஒருவனான என்னை, உங்களுக்கான ஒருவனாக உருவாக்கி முதலமைச்சர் பொறுப்பை ஏற்க வைத்தீர்கள்.
 
நமக்கு வாக்களிக்காத மாற்றுச் சிந்தனை கொண்டோரும் 'தி.மு.க.வுக்கு வாக்களிக்கத் தவறிவிட்டோமே!' என்று என்று எண்ணும் வகையிலான மக்கள் நலன் பேணும் ஆட்சியைக் கட்டமைத்து வருகிறோம்.
 
*கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்
*விடியல் பயணம்
*முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்
*புதுமைப்பெண் திட்டம்
*இல்லம் தேடிக் கல்வி
*இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48
*நான் முதல்வன்
 
- போன்ற நமது  திராவிடமாடல் அரசின் திட்டங்கள் அனைத்தும் உங்களை வந்து சேர்வதை உறுதிசெய்திட ‘கள ஆய்வில் முதலமைச்சர்' என உங்கள் மாவட்டங்களுக்கு வந்தேன்.
 
இதனை இன்னும் செம்மைப்படுத்திட வேண்டுமல்லவா!
 
உங்களின் தேவைகளும் அரசின் சேவைகளும் ஒரு குடையின்கீழ் சந்தித்து விரைவில் தீர்வுகள் கிடைத்தால் அது திராவிட மாடலின் வெற்றி மகுடத்தில் மேலும் ஒரு வைரம் என மின்னிடுமே!
 
அப்படியான திட்டமாக உருப்பெறுகிறது #மக்களுடன்முதல்வர் திட்டம்!
 
இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைக்கத் திங்களன்று கோவைக்கு வருகிறேன்...
 
மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், மாவட்டங்களுக்கான பொறுப்பு அமைச்சர்கள், நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு இந்தத் திட்டத்தின் பயன் மக்களைச் சென்றடைய உதவிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரேமலதாவுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து.. அதிமுக கூட்டணிக்கு மறைமுக அழைப்பா?