Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கட்டிய புருஷனை விட்டுவிட்டு… கள்ளப்புருஷனோடு – பழ கருப்பையா சர்ச்சை பதில் !

Webdunia
வெள்ளி, 10 மே 2019 (09:46 IST)
அதிமுக சார்பில் மூன்று எம்.எல்.ஏ.க்களுக்கு அளிக்கப்பட்ட நோட்டீஸ் விவகாரம் சரியானதுதான் என்று திமுக உறுப்பினர் பழ கருப்பையா தெரிவித்துள்ளார்.

தினகரனுக்கு ஆதரவாக இருப்பதாக கூறி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய மூவர் மீது அதிமுக கொறடா ராஜேந்திரன் சபாநாயகரிடம் புகார் அளித்திருந்தார். இந்த நிலையில் 3 எம்எல்ஏக்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இது தேர்தல் முடிவுகளுக்குப் பின் ஆட்சி கவிழாமல் இருக்க அதிமுக செய்யும் வேலை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. அதனால் மூன்று எம்.எல்.ஏக்கள் மீதும் நடவடிக்கை எடுப்பதைத் தடுக்கும் பொருட்டு சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர திமுக மனு அளித்துள்ளது.

ஆனால் திமுக உறுப்பினரான பழ கருப்பையா இந்த விவகாரத்தில் திமுகவுக்கு எதிராக கருத்தை பேசியுள்ளார். அண்மையில் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த பழ கருப்பையா ’  மூன்று சட்டமன்ற உறுப்பினர்களும் கட்டிய புருஷனான அதிமுகவை விட்டு விட்டு கள்ளப் புருஷனான அம்முகவோடு குடித்தனம் செய்கிறார்கள், இது நெறியற்ற செயல்’ எனக் கூறியுள்ளார்.

பழ கருப்பையாவின் இந்த கருத்தால் திமுக தலைமைக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு எழுந்துள்ளதாகவும் அவர் திமுகவை விட்டு விலக இருப்பதாகவும் பேச்சுகள் எழுந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கல் விழா நாட்களில் தேர்வுகள் நடத்துவதா? சு வெங்கடேசன் எம்பி ஆவேசம்..!

பொங்கல் தினத்தில் சென்னை கிண்டியில் குதிரைப் பந்தயம்.. லட்சக்கணக்கில் பரிசுகள்..!

நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதி உயிரிழப்பு: பக்தர்கள் சோகம்..!

80 மாணவிகளின் சட்டையை அவிழ்த்த தலைமை ஆசிரியர்.. ஆத்திரத்தில் பொங்கிய பெற்றோர்..!

சென்னை புத்தகக் காட்சி இன்று கடைசி.. மக்கள் குவிவார்கள் என எதிர்பார்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments