Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவிகளிடம் ஆபாச சேட்: பந்தோபஸ்துக்கு போன போலீஸார் அத்துமீறல்

Webdunia
வெள்ளி, 10 மே 2019 (09:30 IST)
அரசு கல்லூரிக்கு பந்தோபஸ்துக்கு சென்ற போலீஸார் மாணவிகளிடம் அத்துமீறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
நெல்லை மாவட்டம் சுரண்டையில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் பாதுகாப்பிற்காக ஒரு பெண் போலீஸ் மற்றும் இரு ஆண் போலீஸ் சென்றுள்ளனர். ஆனால், அங்கு அந்த போலீஸார் பெண் போலீஸின் உதவியுடன், மாணவிகளிடம் செல்போன் நம்பர் வாங்கி ஆபாசமாக பேசியதோடு, பாலியல் அத்துமீறலில் ஈடுப்பட்டுள்ளனர். 
 
இதனால், அந்த கல்லூரி மாணவிகள் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமாரிடம் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் தொல்லை கொடுத்த முருகேசன், கண்ணன் இவர்களுக்கு உடந்தையாக இருந்த சரஸ்வதி ஆகியோரை இடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.
இருப்பினும் இந்த சம்பவம் குறித்து மேலும் விசாரணைக்கு உத்தவிட்டு அறிக்கையும் சமர்பிக்க உத்தவிட்டிருந்தார். இது குறித்த அறிக்கை சமர்பிக்கப்பட்டதும் அந்த 2 ஆண் போலீஸையும், அந்த பெண் போலீஸையும் சஸ்பெண்டு செய்தூள்ளார். 
 
போலீஸார் சஸ்பெண்ட் செய்யப்பட்டாலும், பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டியவர்களே அவர்களிடம் அத்துமீறி நடந்துக்கொண்டது அந்த கல்லூரி பகுதியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்