பாமக வேட்பாளருக்கு கிளி ஜோசியம் பார்த்ததாக புகைப்படத்துடன் கூடிய செய்தி வெளியான நிலையில் சில நிமிடங்களில் கிளி ஜோசியர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் இயக்குனர் தங்கர் பச்சான் தொகுதி முழுவதும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் தேர்தல் பிரச்சாரம் செய்தபோது, கிளி ஜோசியம் பார்த்த தங்கர் பஜான் இந்த தேர்தலில் நான் வெற்றி பெறுவேனா என்று பார்த்து சொல்லுங்கள் என்று கேட்டார்
உடனே எனது கிளி எதையும் துல்லியமாக சொல்லிவிடும் என்று கூறி கிளியை வைத்து ஒரு அட்டையை எடுத்து அதில் இருந்த அய்யனார் படத்தை பார்த்து அய்யனாரே உங்களுக்கு ஆசி வழங்கி விட்டார், எனவே வெற்றி உங்களுக்கு உறுதி என்று தெரிவித்தார்
இதனை அடுத்து அவருக்கு வணக்கம் தெரிவித்து விட்டு தனது பிரச்சாரத்தை தங்கர் பச்சான் தொடங்கினார்
இந்த நிலையில் கிளி ஜோசியம் பார்த்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வந்த நிலையில் கிளியை கூண்டில் அடைத்து வளர்ப்பதற்கு வனத்துறை அனுமதிக்கிறதா என்ற விமர்சனங்கள் இருந்தது
இதனை அடுத்து அதிரடியாக கிளி ஜோசியரை கைது செய்த வனத்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.