தத்தெடுத்தவரகள் தன்னை சரியாக கவனித்துக் கொள்ளாததால் குவாரியில் வேலைக்கு சென்ற இளைஞர் நோய்வாய்ப்பட்டு இருக்கும்போது அவர்கள் உதவிக்கு வரவில்லை.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதிகள் தங்களுக்கு குழந்தை இல்லாமல் இருந்துள்ளனர். இதனால் முத்துப்பாண்டி என்ற குழந்தையை தத்து எடுத்து வளர்க்க ஆரம்பித்துள்ளனர். ஆனால் தத்தெடுத்தப் பிறகு அவர்களுக்குக் குழந்தை பிறந்ததால் முத்துப்பாண்டியை முன்பு மாதிரி பார்த்துக்கொள்ள வில்லை என சொல்லப்படுகிறது
இதனால் மனமுடைந்த முத்துப்பாண்டி பெற்றோரிடம் இருந்து விலகிச் சென்று கோவையில் உள்ள ஒரு கல்குவாரியில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது அவருக்கு உடல்நிலைக் குறைபாடு ஏற்பட பரிசோதித்ததில் அவருக்கு காசநோய் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இது சம்மந்தமாக கல் குவாரியில் வேலை செய்யும் நபர்கள், முத்துப்பாண்டியை பெற்றோருக்கு விவரத்தை சொல்ல அவர்கள் முத்துப்பாண்டியை வந்து பார்க்க மறுத்துள்ளனர்.
இதையடுத்து முத்துப்பாண்டியின் நண்பர்கள் அவரைக் கவனித்துகொள்ள இந்த விஷயம் மாவட்ட ஆட்சியருக்கு தெரிவிக்கப்பட்டு இப்போது முத்துப்பாண்டிக்கு தேனி மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை நடைபெற்று வருகிறது.