Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா உடல் நலம் பற்றிய கருணாநிதி கருத்து : பண்ருட்டி ராமச்சந்திரன் பதிலடி

ஜெயலலிதா உடல் நலம் பற்றிய கருணாநிதி கருத்து : பண்ருட்டி ராமச்சந்திரன் பதிலடி

Webdunia
சனி, 1 அக்டோபர் 2016 (16:47 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து விளக்கம் கேட்க திமுக தலைவர் கருணாநிதிக்கு உரிமை இல்லை என்று அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான பண்ருட்டி ராமச்சந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 9 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு இன்னும் ஓய்வு தேவைப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.  
 
இந்நிலையில், ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட வேண்டும் என்றும், அவர் மருத்துவமனையில் உள்ள புகைப்படத்தை வெளியிட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.
 
இதுபற்றி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான பண்ருட்டி ராமச்சந்திரன் “முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து கேள்வி எழுப்பவும், புகைப்படத்தை வெளியிடுமாறு வலியுறுத்தவும் கருணாநிதிக்கு எந்த உரிமையும் இல்லை.  அப்பல்லோ மருத்துவர்கள் மற்றும் லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் ஆகியோர் முதல்வருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் நலமுடன் இருக்கிறார்” என்று கருத்து தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

அடுத்த கட்டுரையில்
Show comments