Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அவசர அவசரமாய் சென்னை புறப்பட்ட பன்னீர் செல்வம்: காரணம் என்ன?

Advertiesment
அவசர அவசரமாய் சென்னை புறப்பட்ட பன்னீர் செல்வம்: காரணம் என்ன?
, திங்கள், 28 மே 2018 (11:44 IST)
கடந்த 22 ஆம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி சென்ற பொதுமக்களை நோக்கி போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகினர். 
 
பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் நாடெங்கும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர சம்பவத்திற்கு நாடெங்கும் பலர் அனுதாபங்களையும் இரங்களையும் தெரிவித்து வருகின்றனர். 
 
இந்நிலையில், இன்று தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட மக்கள் குடியிருப்பு பகுதிகளை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தார். ஒன்றரை மணி நேரம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நேரம் செலவிட்டார்.
 
இதன்பிறகு 10 நிமிடங்கள் மட்டும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேரம் செலவிட்டார். அதன்பிறகு அவசர அவசரமாக விமானத்தில் சென்னை கிளம்பினார். இதனால் கடமைக்கு அவர் வந்து பார்வையிட்டார் என விமர்சனங்கள் எழுந்துள்ளது. 
 
நேற்று அமைச்சர் கடம்பூர் ராஜு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்று மக்களை பார்வையிட்டபோது, மக்கள் அவரை கேள்விகளால் துளைத்தெடுத்தனர். அதே நிலை தனக்கும் ஏற்படகூடாது என  அவசர அவசரமாக புறப்பட்டதாக கூறப்படுகிரது. அவர் மருத்துவமனைக்குள் சென்ற போதும் மீடியாக்கள் அனுமதிக்கப்படவில்லை என தெரிகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஸ்டெர்லைட் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது - உச்சநீதிமன்றம்