Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது!? – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

Webdunia
செவ்வாய், 16 ஆகஸ்ட் 2022 (09:41 IST)
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 1 மற்றும் 2ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் பல செயல்பட்டு வரும் நிலையில் அந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வீட்டு பாடங்கள் அளிக்கப்படுவது வழக்கமாக உள்ளது.

சமீபத்தில் வீட்டுப்பாடம் அளிப்பது தொடர்பான வழக்கு ஒன்றில் சென்னை உயர்நீதிமன்றம், தமிழக பள்ளிகளில் பயிலும் 1 மற்றும் 2ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடங்கள் அளிக்கக்கூடாது என உத்தரவிட்டது.

இந்த உத்தரவை பின்பற்றி பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ள பள்ளிக்கல்வித்துறை அனைத்து பள்ளிகளிலும் 1 மற்றும் 2ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடங்கள் அளிக்காமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும், உயர்நீதிமன்ற உத்தரவை சரியாக கடைபிடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!

குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலந்த விவகாரம்: சிபிசிஐடி வழக்குப்பதிவு

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான ஈரான் அதிபர் என்ன ஆனார்? 12 மணி நேரமாக மீட்பு பணி..!

இன்று 4 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. ரெட் அலர்ட் எச்சரிக்கை..!

8 முறை வாக்களித்த இளைஞர் கைது.. தேர்தல் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments