Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை வருகிறார் ஒவைசி: அமமுக தேர்தல் அறிக்கை கூட்டத்தில் பங்கேற்பு!

Webdunia
செவ்வாய், 9 மார்ச் 2021 (18:38 IST)
ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழகத்தில் நடைபெறவிருக்கும் தேர்தலில் அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், சீமான் கட்சி மற்றும் தினகரன் கட்சி ஆகிய ஐந்து கூட்டணிகள் போட்டியிடுகின்றன. இதில் அமமுக கூட்டணியின் தேர்தல் அறிக்கை வரும் 12ஆம் தேதி சென்னையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி இந்த பொதுக்கூட்டத்தில் அமமுகவின் கூட்டணி கட்சியான ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவர் ஓவைசியின் பங்கேற்க இருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் அவர் அந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பிரசாரம் செய்வார் என்றும் கூறப்பட்டு இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
ஏற்கனவே பீகார் மாநிலத்தில் நடந்த தேர்தலில் ஓவைசியின் கட்சி ஓட்டுகளை பிரித்ததால் தான் காங்கிரஸ் கூட்டணி தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதே நிலை தமிழகத்திலும் ஏற்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாத்மா காந்தி பாகிஸ்தானுக்கு தான் தேசத் தந்தை: பிரபல பாடகர் சர்ச்சை கருத்து..!

ஷேக் ஹசீனாவை எங்களிடம் ஒப்படையுங்கள்: இந்தியாவுக்கு கடிதம் எழுதிய வங்கதேச அரசு..!

மருத்துவ கழிவு கொட்டிய விவகாரம்: மாநில அரசை விளாசிய கேரள உயர்நீதிமன்றம்..!

BSNL நிறுவனத்திற்கு நிலுவைத்தொகை இல்லையா? அமைச்சரின் கருத்துக்கு அண்ணாமலை பதிலடி

தமிழகத்தில் டிசம்பர் இறுதி வரை மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments