Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உங்கள் ஓட்டு ஓவியாவிற்கே ; வாக்கு சேகரிக்கும் ரசிகர்கள் : இது என்னடா அக்கப்போர்!

Webdunia
செவ்வாய், 1 ஆகஸ்ட் 2017 (11:54 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கல்ந்து கொண்டுள்ள நடிகை ஓவியாவிற்கு கூகுளில் ஓட்டு போடுமாறு அவரின் ரசிகர்கள் தெரு தெருவாக பிரச்சாரம் செய்ய தொடங்கியுள்ளனர்.


 

 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடக்கத்திலிருந்தே கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்து வருபவர் ஓவியா. எதற்கும் அலட்டிக் கொள்ளாமல், மற்றவர்களுக்காக தன்னை மாற்றிக் கொள்ளாமல், எப்போதும் சிரித்த படி இருக்கும் அவரை பலருக்கும் பிடித்திருக்கிறது.
 
முதலில், காயத்ரி மற்றும் ஜூலி உள்ளிட்ட சிலர் ஓவியாவை டார்கெட் செய்து பேசிவந்தனர்.  மேலும், ஓவியா கண்ணீர் விட்டு அழும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி, ஓவியா ரசிகர்களை கொந்தளிக்க செய்தது. 
 
எனவே, ஓவியா பேரவை, ஓவியா புரட்சிப்படை, ஓவியா ஆர்மி என உருவாக்கி அவரின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பொங்கி எழுந்தனர். அவரை அழ வைத்த காயத்ரி ரகுராம் மற்றும் ஜூலி ஆகியோருக்கு எதிராக மீம்ஸ்களையும் கருத்துகளையும் பதிவு செய்தனர்.


 

 
இந்நிலையில் ஒரு படிக்கும் மேலே போய், தேர்தலுக்கு வாக்கு சேகரிப்பது போல், அவரின் புகைப்படத்துடன் கூடிய பாதகைகளை கையில் பிடித்துக் கொண்டு தெரு தெருவாக சென்ற ஓவியா ரசிகர்கள், அவருக்கு ஆதரவாக ஓட்டு சேகரிக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகிறது.

அதாவது, பிக்பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு யாரை பிடித்திருக்கிறதோ, இணையத்தில் கூகுள் தளத்திற்கு சென்று அவருக்கு நீங்கள் வாக்களிக்க முடியும். அல்லது தொலைபேசி மூலமாகவும் வாக்களிக்க முடியும். அதைத்தான் குறிப்பிட்டு அவர்கள் வாக்கு சேகரித்து வருகின்றனர்.
 
ஓவியாவை ஒரு அரசியல் தலைவர் ரேஞ்சுக்கு ரசிகர்கள் கொண்டாடி வருவது சமூகவலைத்தளங்களில் விவாதத்தை உருவாக்கியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

39 ஆண்டுகளுக்குப் பிறகு“கல்கி 2898 கி.பி” திரைப்படத்தில் இணைந்த 2 ஜாம்பவான்கள்!

கணவரை இழந்து ஆன்லைன் வாடகை இரு சக்கர வாகனம் ஓட்டும் பணி செய்துவரும் பெண்களுக்கு 15-லட்சம் மதிப்புள்ள பேட்டரி வாகனம்

மேலும் ஒருவர் பலி.. கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய பலி 62 ஆக அதிகரிப்பு ..!

போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணி!

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய புதிய கட்டுப்பாடா..? ஐஆர்சிடிசி விளக்கம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments