Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல்ஹாசன் முதல்வராகலாம்; ரஜினிக்கு வாய்ப்பு இல்லை: பிரபல ஜோதிடர் கணிப்பு!

கமல்ஹாசன் முதல்வராகலாம்; ரஜினிக்கு வாய்ப்பு இல்லை: பிரபல ஜோதிடர் கணிப்பு!

Webdunia
செவ்வாய், 1 ஆகஸ்ட் 2017 (11:18 IST)
தமிழக அரசியலில் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அரசியல் வெற்றிடம் ஒன்று ஏற்பட்டுள்ளது. திமுக தலைவர் கருணாநிதியும் உடல் நலக்குறைவால் கடந்த 10 மாதங்களால் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறார்.


 
 
இந்த காரணங்களால் தமிழக அரசியலில் பல அதிரடி திருப்பங்கள் நடந்து வருகிறது. நிலையான, உறுதியான ஒரு ஆளுமை இல்லாததால் தமிழகம் பல இன்னல்களை சந்தித்து வருகிறது என்பதே நிதர்சனமான உண்மை.
 
இந்த சூழலில் தமிழக அரசியல் வெற்றிடத்தை நிரப்ப நடிகர் ரஜினிகாந்த் அரசியல் குறித்து பேசா ஆரம்பித்தார். ஆனால் அவர் இன்னமும் உறுதியாக அரசியலில் களம் இறங்கவில்லை. அவர் எப்பொழுது அரசியலில் இறங்குவார், கட்சி ஆரம்பிப்பார் என்பது அந்த ஆண்டவனுக்கு கூட தெரியாது. ஏன அவருக்கே குழப்பம் தான்.
 
அதே நேரத்தில் ரஜினியை முந்திக்கொண்டு நடிகர் கமல் அரசியலுக்கு வந்துவிடுவாரோ என பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தமிழக அரசின் மீதும், அமைச்சர்கள் மீதும் பல குற்றாச்சட்டுகளை வைத்து வரும் கமல் அமைச்சர்களின் விமர்சனங்களுக்கு அதிரடியாக பதிலடியும் கொடுத்து வருகிறார். இதனால் கமலுக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது.
 
கமல், ரஜினி இவர்களில் யார் அரசியலில் வருவார், முதல்வர் நாற்காலி யாருக்கு என்ற விவாதம் கூட நடக்கின்றன. இந்நிலையில் நடிகர்கள் கமல், ரஜினி இவர்களில் யார் தமிழக முதல்வராகும் யோகம் உள்ளது என பிரபல ஜோதிடர் ஆதித்ய குருஜி தெரிவித்துள்ளார்.
 
சேலத்தில் நடந்த ஜோதிட மாநாட்டில் கலந்து கொண்ட ஆதித்ய குருஜி அளித்த பேட்டியில், ரஜினிகாந்தின் ஜாதகத்தை பொறுத்தவரையில் அவர் தனியாக அரசியல் கட்சி ஆரம்பிக்கும் சாத்தியக்கூறு உள்ளது. ஆனால் அவரால் முதல்வராக முடியாது.
 
மேலும் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் போது மக்கள் எதிர்பார்க்காத ஒருவர் தமிழக முதல்வராக வர வாய்ப்பு உள்ளது. அது நடிகர் கமல்ஹாசனாக கூட ஒருவேளை இருக்கலாம். காலம் தான் அதை தீர்மானிக்கும். ஜோதிடர் ஆதித்ய குருஜி உலக தமிழ் ஜோதிடர் மகாஜன சபை தலைவர் ஆக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments