Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த இரண்டு நாட்கள் மழை கொட்டும்: ஆரஞ்ச் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

Webdunia
புதன், 29 நவம்பர் 2023 (14:02 IST)
டிசம்பர் முதல் வாரத்தில் மிக கனமழை தமிழகத்தில் பெய்யும் என்பதால் ஆரஞ்சு அலர்ட் விடுத்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.  வடக்கு பருவமழை தீவிரமடைந்தது மட்டுமின்றி வங்க கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகவும் மழை பெய்து வருகிறது,. 
 
இந்த நிலையில் வானிலை ஆய்வு மைய தன்மண்டல தலைவர் பாலச்சந்திரன் அவர்கள் இன்று செய்தியாளர்களிடம் பேசிய போது ’டிசம்பர் 2 மற்றும் 3 ஆகிய இரண்டு நாட்களுக்கு தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு அலர்ட் என்று தெரிவித்துள்ளார். 
 
டிசம்பர் 2, 3 ஆகிய தேதிகளில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு என்று அவர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
எனவே டிசம்பர் முதல் வாரத்தில் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உசிலம்பட்டி சாலை முழுக்க 500 ரூபாய் நோட்டுகள்! அள்ளிச்சென்ற மக்கள்!

சிபிஎஸ்இ நியனமன தேர்வில் இந்தித் திணிப்பு.. மத்திய அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்பி கடிதம்..!

காதலை ஏற்க மறுத்த 14 வயது சிறுமி.. ஜாமினில் வெளிவந்து வெட்டி கொலை செய்த இளைஞர்..!

கனமழை காரணமாக நிலச்சரிவு.. சிம்லாவில் 80 சாலைகள் மூடப்பட்டன..!

பஜாஜ் நிறுவனத்தின் அட்டகாசமான CNG பைக்! Bajaj Freedom 125 CNG அறிமுகம்! – சிறப்பம்சங்கள் மற்றும் விலை!

அடுத்த கட்டுரையில்
Show comments