Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

3வது அலை வந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது: ஓபிஎஸ் அறிக்கை!

3வது அலை வந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது: ஓபிஎஸ் அறிக்கை!
, திங்கள், 12 ஜூலை 2021 (12:48 IST)
மூன்றாவது அலை வந்து விடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது என முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்
 
கொரோனா நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை இறங்குமுகத்தில் இருப்பதை கணக்கில் கொண்டும் சில ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்ததை அடுத்து வணிக வளாகங்களிலும் சுற்றுலா தலங்களிலும் அலைமோதிய கட்டுக்கடங்காத கூட்டத்தை பார்க்கும் போது மூன்றாவது அலை வந்து விடுமோ என்ற அச்சம் தான் மேலோங்கி நிற்கிறது என ஓபிஎஸ் அவர்கள் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார் 
 
நேற்றைய தினம் திநகர் புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வணிக வளாகங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்த எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்றும் வணிக வளாகங்கள் அமைந்துள்ள தேர்தல் திருவிழா போல் காட்சி அளித்தது என்றும் 100 பேர்கள் இருக்கக்கூடிய இடத்தில் 200 பேர்கள் இருந்ததால் சமூக இடைவெளி கடைபிடிக்கவில்லை இன்றும் என்றும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார் 
 
எனவே முதல்வர் அவர்கள் இதில் உடனடி கவனம் செலுத்தி வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காதவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இதனை அந்தந்த பகுதியில் உள்ள காவல் துறையினர் கண்காணிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பேருந்துகள் இயங்காது: தனியார் பேருந்து உரிமையாளர்கள் அறிவிப்பு!