Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி, கமலுக்கு பூஜ்யம் தான் கிடைக்கும்: துணை முதல்வர் ஓபிஎஸ்

Webdunia
வெள்ளி, 23 மார்ச் 2018 (20:23 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் ஒரே நேரத்தில் அரசியல் களத்தில் இறங்கியுள்ளது அதிமுக, திமுக உள்பட முன்னணி கட்சிகளுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத அரசியல் களத்தில் இவர்கள் இருவரின் செல்வாக்கு எப்படி இருக்கின்றது என்பது வரும் தேர்தலில்தான் தெரியவரும்

இந்த நிலையில் எதிரும் புதிருமாக இருக்கும் திமுகவும் அதிமுகவும் ரஜினி-கமலை விமர்சனம் செய்வதில் மட்டும் ஒற்றுமையை கடைபிடித்து வருகின்றது.

இந்த நிலையில் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஓராண்டு சாதனை விழாவில் பேசிய துணை முதல்வர் ஓபிஎஸ், ரஜினி-கமலை மறைமுகமாக தாக்கி பேசினார். அவர் பேசியதாவது: அரசியலுக்கு புதிது புதிதாக ஒருசிலர் வந்து கொண்டிருக்கிறார்கள். மக்களை பற்றி சிந்திக்காதவர்கள் சிஸ்டத்தை பற்றி சிந்திக்கிறார்கள். சிலர் கருத்து கந்தசாமியாக இருக்கிறார்கள். அரசியல் பற்றி தெரியாதவர்களுக்கு பூஜ்ஜியம்தான் கிடைக்கப்போகிறது என்று கூறினார்.

வரும் தேர்தலில் பூஜ்யம் கிடைக்கப்போவது ரஜினி-கமலுக்கா, அல்லது அவர்களை விமர்சனம் செய்பவர்களுக்கா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி சட்டமன்ற தேர்தல்: கெஜ்ரிவாலை எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளர் அறிவிப்பு..!

அண்ணா பல்கலை மாணவி விவகாரத்தில் உதயநிதி மெளனம் ஏன்? அண்ணாமலை கேள்வி

மது அருந்தினால் 200 நோய்கள் தாக்கும்: எச்சரிக்கை வாசகங்கள் அச்சிட அன்புமணி கோரிக்கை

ஞானசேகரன் வீட்டில் சிறப்பு புலானாய்வுக்குழு சோதனை.. கைப்பற்றப்பட்ட தொப்பி..!

திமுக எம்பி கதிர் கதிர் ஆனந்த் கல்லூரியில் அமலாக்கத்துறை சோதனை.. பரபரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments