ஓபிஎஸ் திமுகவிற்கு சென்றுவிட்டார்! சூடு, சுரணை இல்லாமல் பேசுகிறார்! – எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

Webdunia
திங்கள், 20 நவம்பர் 2023 (11:03 IST)
கோவை விமான நிலையத்தில்  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எடப்பாடி பழனிச்சாமி:


 
மீன்வளப்பல்கலை கழகத்திற்கு ஜெயலலிதா பெயர் வைக்கப்பட்டதை அரசியல் காழ்ப்புணர்ச்சியால், பொறுக்க முடியாமல் திமுக அரசு ரத்து செய்தது எனவும் தெரிவித்தார்.

ஒ.பி.எஸ் திமுகவிற்கு சென்றுவிட்டார், அவர் சூடு,சொரணை இல்லாமல் பேசி வருகின்றார் என்றும் தெரிவித்தார். எங்கள் உடலில் அதிமுக ரத்தம்ஒடுகின்றது எனவும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

துணை வேந்தர் நியமனம் குறித்து கலைஞர், அன்பழகன் சொன்ன கருத்துக்கு எதிராக ஸ்டாலின்  இதை செய்கின்றாரா? என கேள்வி எழுப்பிய அவர், முதல்வராக இருப்பவர்களுக்கு தில், திராணி வேண்டும் இப்போது இருப்பவரிடம் அது  இல்லை எனவும் தெரிவித்தார்.பூனைகுட்டி வெளியில் வந்துவிட்டது என்று சபாநாயகர் சொல்கின்றார், பா.ஜ.கவில் இருந்து நாங்கள் வெளியே வந்து விட்டோம், சிறுபான்மை வாக்கு அதிமுகவிற்கு வந்து விட்டது என கூறிய அவர், நான் கேட்ட கேள்விக்கு சட்டமன்றத்தில்  திமுகவினர் பதில் அளிக்க வில்லை எனவும் தெரிவித்தார்.

தேர்தலுக்கு கால அவகாசம் இருக்கின்றது, தேர்தல் நேரத்தில் நல்ல கூட்டணி அமையும் எனவும்  திமுக ஆட்சி அவலங்களை மக்களிடம் எடுத்து சொல்வோம்,  இதை மக்கள் நன்கு புரிந்து இருக்கின்றனர் எனவும் தெரிவித்தார்.

மேலும் கோவையில் ஒரு திட்டம் கூட இந்த அரசால் செய்யப்படவில்லை எனவும், அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை ஸ்டிக்கர் ஓட்டி திறந்து வைத்து கொண்டு இருக்கின்றனர் எனவும்  கடன் வாங்க இந்த அரசு நிபுணர் குழு அமைத்து இருக்கின்றனர் என தெரிவித்த அவர், நாடாளுமன்ற தேர்தலில் 40 இடங்களிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் எனவும் தெரிவித்தார்.

திமுக மட்டுமே சிறுபான்மை மக்களுக்கு செய்தது என்கின்றனர், ஆனால் ஆட்சிக்கு வந்த பின்னர் சிறுபான்மை மக்களுக்கு நல்லது எதுவும் திமுக அரசு செய்ய வில்லை எனவும், திமுக ஆட்சி இருக்கும் போது ஆயிரம் காவலர்கள் உக்கடம் பகுதியில்  கொள்ளையடித்து சென்றனர்,இதை சிறுபான்மை மக்கள் மறக்க மாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.

சிறு குறு தொழில்கள் மின்கட்டணத்தால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர், இதற்கு நாளுமன்ற தேர்தலில் தக்க பதில் சொல்வார்கள் எனவும் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஃபுல்லா முள்வேலி!.. ஒருத்தனும் ஏற முடியாது!.. ஈரோடு தவெக பொதுக்கூட்ட அப்டேட்!...

சர்வேலாம் சும்மா!.. தளபதியை ஏமாத்துறாங்க!.. புலம்பும் தவெக நிர்வாகிகள்!....

பாதை மாறி சென்ற ரேபிடோ பைக் ஓட்டுனர்.. பைக்கில் இருந்து குதித்து தப்பிய இளம்பெண்..!

சாமிய ஊர்வலம் கொண்டு போய் கோவிலுக்குள்ள வைக்கணும்!.. விஜயை கொண்டாடும் ஈரோடு தவெக நிர்வாகிகள்..

டெல்லியில் மெஸ்ஸி.. விராத் கோஹ்லியுடன் கால்பந்து விளையாடுகிறாரா? மோடி, அமித்ஷாவுடன் சந்திப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments