பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் என அறிவித்த திமுக அரசு ஆண்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்து முன்னாள் துணை முதல்வர் ஓபிஎஸ் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்
திமுக அரசு சமீபத்தில் தொடங்கியதிலிருந்து முதல் அறிவிப்பாக மகளிர்களுக்கு பேருந்தில் இலவச பயணம் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மகளிருக்கு பேருந்தில் இலவச பயணம் எனக்கூறிவிட்டு ஆண்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாக என ஓபிஎஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்
குறைந்தபட்ச கட்டணமாக ரூபாய் 5 என்று இருந்த நிலையில் தற்போது 10 ரூபாய் வசூலிக்க படுவதாகவும் மகளிருக்கான இலவச பஸ் பயணத்தால் ஏற்படும் இழப்பை ஆண்கள் தலையில் சுமத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்
இந்த கட்டண வசூல் அரசுக்கும் ஆட்சியாளர்களும் தெரிந்து நடக்கிறதா தெரியாமல் நடக்கிறதா என்று கேள்வி எழுப்பியுள்ள ஓபிஎஸ் புதிய உத்திகளை அரசு போக்குவரத்து கழகங்கள் கடைபிடிப்பது அரசாணைக்கு எதிரான செயல் என்றும் முதல்வர் உடனடியாக இதில் தலையிட்டு ஆண்கள் தலையில் சுமத்தப்படும் இழப்பை தடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்