Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி வாரம் மூன்று நாட்கள் மட்டுமே மளிகை கடை திறப்பு: அதிரடி அறிவிப்பு

Webdunia
வியாழன், 9 ஏப்ரல் 2020 (08:04 IST)
இனி வாரம் மூன்று நாட்கள் மட்டுமே மளிகை கடை திறப்பு
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக ஊரடங்கு உத்தரவு இந்தியா முழுவதும் அமலில் இருந்தாலும் மளிகை மற்றும் காய்கறி கடைகள் வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டது 
 
இருப்பினும் திடீரென கடந்த சில நாட்களுக்கு முன்னர் மளிகை கடைகள் காலை 6 மணி முதல் 2 மணி வரை மட்டுமே இயங்கும் என தமிழக அரசு அதிரடியாக அறிவித்தது. அதன் பின் ஒரு சில நாட்களில் இரண்டு மணி என்பது ஒரு மணியாக குறைக்கப்பட்டது,. இதனால் மளிகை பொருட்கள் மற்றும் காய்கறி பொருட்கள் வாங்குபவர்கள் பாடு திண்டாட்டம் ஆகியது
 
இந்த நிலையில் தற்போது வேலூர் மாவட்டத்தில் மட்டும் வாரம் மூன்று நாட்கள் மட்டுமே இனி மளிகை கடைகள் திறக்கப்படும் என்று அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஞாயிறு, திங்கள் மற்றும் வியாழன் ஆகிய மூன்று நாட்களில் மட்டுமே மளிகை கடைகள் திறக்க வேண்டும் என்றும் அதிலும் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே திறக்கப்பட வேண்டும் என்றும் வேலூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது
 
அதேபோல் பால் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் 8 மணி வரையிலும் மாலை 6 மணி முதல் 7 மணி வரை மட்டுமே திறக்க வேண்டும் என்றும் ஊரடங்கு உத்தரவு முடியும்வரை இறைச்சி கடைகள் திறக்க கூடாது என்றும் வேலூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் மட்டும் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளதால் வேலூர் மாவட்ட கடைக்காரர்களும் பொதுமக்களும் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
அதேபோல் சேலத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே மளிகை, காய்கறிகள் வாங்க மக்கள் அனுமதிக்கப்படுவர் என்றும், 144 தடை உத்தரவு விதிமுறைகள் சேலம் மாவட்டத்தில் இன்று முதல் கடுமையாக அமல்படுத்தப்படுகின்றன 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக ஆனந்த் கைதை எதிர்த்து போராட்டம்! மேலும் 100 தவெக தொண்டர்கள் கைது! - தொடரும் கைது படலம்!

தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது.. கவர்னர் சந்தித்த சில நிமிடங்களில் பரபரப்பு..

மாணவியை ரயில் முன்பு தள்ளி கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை..!

பிற மாநிலங்கள்ல பெண்கள் நிலை இதைவிட மோசம்! - விஜய்க்கு அமைச்சர் ரகுபதி பதில்!

தென் கொரியா: 179 பேர் இறந்த விமான விபத்துக்கு பறவைகள் காரணமா? இதுவரை தெரியவந்தது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments