Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காத்து வாங்கும் முன்பதிவு - கல்லா கட்டுமா காலா படம்?

Advertiesment
Kaala movie
, செவ்வாய், 5 ஜூன் 2018 (14:10 IST)
நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிற 7ம் தேதி வெளியாகவுள்ள காலா படத்தின் முன்பதிவு மந்த நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது.

 
ஆன்மிக அரசியலை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் சமூக விரோதிகள் புகுந்துவிட்டதுதான் பிரச்சனை, போலீசாரை தாக்கியதும், கலெக்டர் அலுவலகத்தில் தீ வைத்ததும் அவர்கள்தான் எனக்கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், போராட்டம் போராட்டம் என தொடர்ந்தால் தமிழ்நாடு சுடுகாடாகிவிடும் என அவர் கூறியது கடும் எதிர்ப்புக்கு உள்ளானது.
 
இதனால், அவர் நடித்து வெளியாகவுள்ள காலா படத்தை பார்க்க மாட்டோம் என பலரும் சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், காலா படத்தின் முன்பதிவு தொடங்கிவிட்டது. வழக்கமாக ரஜினி படம் வெளியாகிறது எனில், முன்பதிவு தொடங்கியவுடனேயே ஒரு வாரத்திற்கு டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டு விடும். ஆனால், சென்னையில் சத்யம் உள்ளிட்ட முக்கிய தியேட்டர்களிலேயே வார இறுதிநாட்களான சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் டிக்கெட் இன்னும் புக் ஆகாமல் காலியாக கிடக்கிறது. 
 
ஏற்கனவே, கர்நாடகாவில் இப்படத்தை வெளியிடுவதில் சிக்கில் நீடித்து வரும் நிலையில், சென்னையில் ஆன்லைன் புக்கிங் மந்தமாக இருப்பது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலகின் முதல் செயற்கை பெண்ணுறுப்பு பொருத்தப்பட்ட இளம்பெண்