ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி கர்ணன் மீது மேலும் ஒரு வழக்கு!

Webdunia
வியாழன், 24 டிசம்பர் 2020 (16:46 IST)
நீதிபதிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகவும், வீடியோ ஒன்று வெளியிட்டதாகவும் ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி கர்ணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும் தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது தெரிந்ததே
 
கடந்த சில தினங்களுக்கு முன்னர் முன்னாள் நீதிபதி கர்ணனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது என்பதும் அதன் பின்னர் அவர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டு குணமாகிய பின் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தற்போது ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி கர்ணன் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதி பானுமதி வீட்டின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கர்ணன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் வழக்கு பதிவு செதுள்ளது. இதே வழக்கில் முன்னாள் நீதிபதி கண்ணனின் ஆதரவாளர்கள் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஏற்கனவே ஒரு வழக்கு ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் மீது இருக்கும் நிலையில் தற்போது புதிதாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெஸ்ஸியுடன் ஒரு போட்டோ எடுக்க ரூ.10 லட்சம் கட்டணமா? பொங்கியெழும் நெட்டிசன்கள்.!

கரூர் நெரிசல் விவகாரம்: உயர் நீதிமன்ற விசாரணை நடைமுறையில் தவறு.. உச்சநீதிமன்றம்

ஈரோட்டில் தவெக பொதுக்கூட்டம் நடக்குமா?!.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி!....

டெல்லிக்கு செல்லும் முன் பழனிச்சாமியுடன் சந்திப்பு.. நயினர் நாகேந்திரன் மூவ் என்ன?..

சசி தரூரின் தொடர் 'ஆப்சென்ட்': ராகுல் காந்தி தலைமையிலான கூட்டத்தை மீண்டும் தவிர்த்தார்

அடுத்த கட்டுரையில்
Show comments