Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குடும்ப பிரச்சினை காரணமாக மனைவியை தீவைத்துக் கொளுத்திய முதியவர் தானும் தீயிட்டு தற்கொலை!

Advertiesment
குடும்ப பிரச்சினை காரணமாக மனைவியை தீவைத்துக் கொளுத்திய முதியவர் தானும் தீயிட்டு தற்கொலை!

J.Durai

சிவகங்கை , சனி, 13 ஏப்ரல் 2024 (09:43 IST)
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வைத்திய லிங்கபுரம் 2வது வீதியில் வசித்து வந்தவர் தங்கராஜ். (60) இவரது மனைவி லதா. கைத்தறி நெசவாளியான  முதியவர் எங்கும் செல்லாமல் வீட்டில் ஓய்வில் இருந்துள்ளார்.
 
IT கம்பெனி ஊழியரான இவரது மகன் நவீனுக்கு சமீபத்தில் திருமணம் நடந்து ஒரு குழந்தையும் உள்ளது.
 
இந்நிலையில், தன்னை சரியாக கவனிப்பதில்லை என்று மனைவி,மகன் மீது ஆத்திரத்தில் இருந்ததோடு, தன்னை சரியாக கவனிப்பதில்லை என்றும், உணவு கூட கொடுப்பதில்லை என்றும் அக்கம், பக்கத்தினரிடம் முதியவர் அடிக்கடி வருத்தத்துடன் கூறி வந்துள்ளார்.
 
நேற்று நள்ளிரவு அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தபோது, ஏற்கனவே கேனில் தயாராக வாங்கி வைத்திருந்த பெட்ரோலை எடுத்து, உறங்கிக் கொண்டிருந்த மனைவி மீது ஊற்றி தீ வைத்ததோடு, தன் மீதும் பற்ற வைத்து கொண்டுள்ளார்.
 
இருவரின் அலறல் சத்தம் கேட்டதும் நவீன் இருவரையும் காப்பாற்ற முயன்ற போது, அவர் மீதும் தீ பற்றி படுகாயம் அடைந்தார்.
 
தங்கராஜ் தம்பதியினர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிலையில், 80 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த போது தகவல் அறிந்து வந்த போலீசார் நவீனை மீட்டு காரைக்குடியில் முதலுதவி சிகிச்சைக்கு பின் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
இறந்தவர்களின் உடலை மீட்டு காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீ விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேர்தலில் 3வது தீய சக்தியாக பாஜக ஒரு கூட்டணி அமைந்துள்ளது -அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பரப்புரை!