Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னை யாரும் கடத்தல.. மனுவை வாபஸ் வாங்குறேன்! – வேட்பாளர் திடீர் முடிவு!

Webdunia
திங்கள், 7 பிப்ரவரி 2022 (11:49 IST)
புதுக்கோட்டையில் மாயமான வேட்பாளர் தனது வேட்புமனுவை திரும்ப பெற்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதில் அதிமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் சார்பிலும் போட்டியிட பலரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சியும் அனைத்து பகுதிகளிலும் போட்டியிடுகிறது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் பேரூராட்சியின் 3வது வார்டில் போட்டியிட நாம் தமிழர் கட்சி சார்பில் செல்வம் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அந்த வார்டில் பெரிய கட்சிகள் சார்பில் யாரும் வேட்பாளராக நிற்கவில்லை என கூறப்படுகிறது.

அதே வார்டில் சுயேச்சையாக நிற்கும் லட்சுமணன் என்பவர் செல்வத்தை தேர்தலில் இருந்து விலகுமாறு மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. தற்போது செல்வத்தை லட்சுமணன் கடத்திவிட்டதாக செல்வத்தின் குடும்பத்தினரும், நாம் தமிழர் கட்சியினரும் புகார் அளித்தனர். இந்நிலையில் தன்னை யாரும் கடத்தவில்லை என வீடியோ வெளியிட்டுள்ள வேட்பாளர் செல்வம், தனது வேட்புமனுவையும் திரும்ப பெற்றுள்ளார். இதை யாரும் அரசியலாக்க வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீலகிரி, கோவை மலை பகுதியில் முதல் மிக கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

சபாநாயகர் ஓம் பிர்லாவின் உரைக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் கண்டனம்.. அவையில் பரபரப்பு..!

சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு..! ஜூலை 3-ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!

10.5% இடஒதுக்கீடு தொடர்பாக அமைச்சருடன் விவாதிக்க தயார்.! சவால் விடும் அன்புமணி..!!

சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து பா.ம.க எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments