Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஞ்சிபுரம் மேயர் மீது நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு.. 33 கவுன்சிலர்கள் போர்க்கொடி..!

Mahendran
செவ்வாய், 9 ஜூலை 2024 (18:28 IST)
காஞ்சிபுரம் மேயருக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கவுன்சிலர்கள் உட்பட 33 கவுன்சிலர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளதை அடுத்து காஞ்சிபுரம் மேயர் மீது வரும் 29ஆம் தேதி நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பு நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
காஞ்சிபுரம் மாநகராட்சியில் திமுகவை சேர்ந்த மகாலட்சுமி யுவராஜ் என்பவர் மேயர் ஆக இருந்து வரும் நிலையில் இந்த மாநகராட்சியில் திமுக, காங்கிரஸ் உள்பட மொத்தம் 51 கவுன்சிலர்கள் உள்ளனர்.
 
இதில் அதிமுக, பாமக கவுன்சிலர்கள் மட்டும் இன்றி திமுக கவுன்சிலர் சிலரும் மேயர் மகாலட்சுமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கில் உள்ளனர். கவுன்சிலர்கள் சிலர் மாநகராட்சி கூட்டங்களை புறக்கணித்தும் வெளிநடப்பு செய்தும் வந்த நிலையில் மாநகராட்சியில் எந்த  திட்டத்தின் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட முடியாமல் முடங்கி போய் உள்ளது.
 
இதனை அடுத்து திமுக உள்பட 33 கவுன்சிலர்கள் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் அவர்களை சந்தித்து மேயர் மகாலட்சுமி யுவராஜ் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று மனு அளித்தனர். மேலும் கவுன்சிலர்கள் இதற்கான பிரமாண பத்திரத்தையும் தாக்கல் செய்துள்ளனர். இதனை அடுத்து ஜூலை 29ஆம் தேதி காஞ்சிபுரம் மேயர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் வாக்கெடுப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக கொடிகள், துண்டுகள்.. திருப்பூரில் குவியும் ஆர்டர்கள்..!

அமெரிக்க தேர்தலில் வெற்றி எதிரொலி: தெலுங்கு டிரம்ப் கோவிலில் சிறப்பு வழிபாடு..!

நான் கேட்காமலேயே வரதட்சணை கொடுத்தனர்.. மனைவி குடும்பத்தின் மீது மாப்பிள்ளை வழக்கு..!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

சென்னை ரிப்பன் மாளிகையை சுற்றி பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி: முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments