Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக ஆட்சியில் புதிய பேருந்துகள் வாங்0காததால் தான் அரசு பேருந்து விபத்துகள் ஏற்பட்டு வருகின்றது- போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்!

J.Durai
வியாழன், 25 ஏப்ரல் 2024 (22:41 IST)
2015ம் ஆண்டு அரியலூர் மாவட்டம் சன்னாசிப்பேட்டை பகுதியில் நடைபெற்ற முற்றுகையிடும் போராட்டத்தில் அப்போதைய குன்னம் தொகுதி எம்எல்ஏவும் தற்போதைய போக்குவரத்து துறை அமைச்சருமான சிவசங்கர் கலந்து கொண்ட போது பிரச்சனை ஏற்பட்டு அது கலவரமாக மாறியது. 
 
இதில் 9 போலீசார் காயமடைந்தனர். இது குறித்து கடலூர் மாவட்டம் ஆவினங்குடி போலீசார் பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், உட்பட 8 பிரிவுகளின் கீழ் 37 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
 
இந்நிலையில்,இந்த வழக்கு விசாரணை கடலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் நீதிமன்றத்தில் ஆஜரானார். 
 
வழக்கை விசாரணை செய்த நீதிபதி ஜவகர், வழக்கு விசாரணையை ஜூன் மாதம் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
 
பின்னர் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நேற்று திருச்சியில் நடத்த பேருந்து விபத்து குறித்து தெரிவிக்கையில்,
 
அதிமுக ஆட்சியில் புதிய பேருந்துகள் வாங்காததால் தான் இது போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது,புதியதாக 7000 பேருந்துகள் வாங்க முதலமைச்சர் நிதி ஒதுக்கியுள்ளார். 350 புதிய பேருந்துகள் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளதாகவும், புதிய பேருந்துகள் வர வர பழைய பேருந்துகள் அனைத்தும் மாற்றப்படும்.
 
இந்த ஆண்டுக்குள்ளேயே 15 ஆண்டுகள் பழமையான பேருந்துகள் மாற்றப்படும் எனவும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடியரசு தின அலங்கார அணிவகுப்பில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி நிராகரிப்பா? ஒரு விளக்கம்..!

தமிழ்நாட்டில் நடப்பது ஆன்லைன் ரம்மி நிறுவனங்களை வளர்க்கும் அரசா? அன்புமணி கேள்வி..!

குவைத் நாட்டின் உயரிய விருது: பிரதமர் மோடிக்கு வழங்கி கெளரவம்..!

இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய பள்ளி மாணவி.. சென்னை இளைஞர் உள்பட பலியான 3 உயிர்கள்..

பந்தயம் வைத்து நாய்ச்சண்டை: 81 பேர் கைது! 19 வெளிநாட்டு நாய்கள் பறிமுதல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments