Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வடகிழக்குப் பருவமழை : பல்துறை மண்டக்குழு அமைக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

Webdunia
செவ்வாய், 1 நவம்பர் 2022 (14:55 IST)
வடகிழக்கு பருவமழையையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாண்புமிகு முதலவர் முக.ஸ்டாலின் தலைமையில், , பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.

அப்போது, முதல்வர் ஸ்டாலின் மழைக்காலத்தில் மேற்கொள்ளப் பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தெரிவித்ததாவது:

வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாக, திருவள்ளூர், காஞ்சிபுரம், ஆகிய  பகுதிகளில் மிக கனமழை, கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

ALSO READ: அரசு பள்ளிகளில் ரூ.1,050 கோடியில் புதிய வகுப்பறைகள் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
 
கடந்த ஆண்டு, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளபெருக்கு ஏற்பட்டது. இதேபோன்ற சவாலாக அமைந்திருந்தது. அதேபோன்ர நிலை வரக்கூடாது என இதற்காக திருப்புகழ் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இம்முறை மழை நீர் வெள்ளம் தேங்காதவாறு மாவட்ட நிர்வாகம் பாதுகாக்க வேண்டும்.  மக்களுக்கு நேரடி சேவை வழங்கும் துறைகளில்,  மாவட்ட நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்தி, பாதிற்ப்பிற்குள்ளாகும் பகுதிகளை கண்காணிக்க பல்துறை மண்டலங்கள் அமைக்க வேண்டும், மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள், என்ணெய் நிறுவனங்கள், கைப்பேசி நிறுவனங்கள் ஆயத்த  நிலையில் இருக்க வேண்டும். பாதிற்பிற்குள்ளான மக்களுக்கு பாதுகாப்பான குடி நீர், உணவு,  இடம் ஆகியவற்றை அளிக்க வேண்டும்! ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு முன்னெச்சரிக்கை தகவல் முன்கூட்டி அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்,

எந்தவித பேரிடரையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கும் உங்களை மனதராப் பாராட்டுகிறேன்.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாத்மா காந்தி பாகிஸ்தானுக்கு தான் தேசத் தந்தை: பிரபல பாடகர் சர்ச்சை கருத்து..!

ஷேக் ஹசீனாவை எங்களிடம் ஒப்படையுங்கள்: இந்தியாவுக்கு கடிதம் எழுதிய வங்கதேச அரசு..!

மருத்துவ கழிவு கொட்டிய விவகாரம்: மாநில அரசை விளாசிய கேரள உயர்நீதிமன்றம்..!

BSNL நிறுவனத்திற்கு நிலுவைத்தொகை இல்லையா? அமைச்சரின் கருத்துக்கு அண்ணாமலை பதிலடி

தமிழகத்தில் டிசம்பர் இறுதி வரை மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments