Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்க நிதி இல்லையா? ஈபிஎஸ் கண்டனம்..!

Mahendran
சனி, 8 பிப்ரவரி 2025 (12:00 IST)
மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை கடந்த 3 மாதங்களாக ஸ்டாலின் மாடல் திமுக அரசால் வழங்கப்படவில்லை என வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
திரு. கருணாநிதி பெயரில் இசிஆர் சாலையில் அரங்கம் கட்டுவதற்கு இருக்கும் நிதி, மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்குவதற்கு இல்லையா?
 
தன்னுடைய நிர்வாகத் திறமையின்மையை மறைக்க, நிதி நிலையை காரணம் காட்டி, மாற்றுத் திறனாளிகளை வஞ்சிக்கும் ஸ்டாலின்  மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
 
உதவித்தொகை இன்றி தவிக்கும் மாற்றுத் திறனாளிகளின் நலனைக் கருத்திற்கொண்டு, உடனடியாக உதவித்தொகை நிலுவைகளை வழங்கி, மாதாந்திர உதவித்தொகை தவறாமல் வழங்கப்படுவதை உறுதிசெய்யுமாறு ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி தேர்தல் நிலவரம் குறித்து எனக்கு தெரியாது: கேரளாவில் பிரியங்கா காந்தி பேட்டி..!

டெல்லியில் 27 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பாஜக ஆட்சி..! காங்கிரஸ் கட்சிக்கு முட்டை..!

புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.64 ஆயிரத்தை நெருங்கியதால் பரபரப்பு..!

முதல்வர் அதிஷி, அரவிந்த் கெஜ்ரிவால் பின்னடைவு.. டெல்லியில் ஆட்சி அமைக்கிறதா பாஜக?

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் முன்னிலை.. நாதகவுக்கு எவ்வளவு ஓட்டு?

அடுத்த கட்டுரையில்
Show comments