இஸ்லாமியர்கள் அதிகம் வசித்து வரும் லட்சத்தீவில் இதுவரை வெள்ளிக்கிழமை விடுமுறையாக இருந்த நிலையில் இனி வெள்ளிக்கிழமை விடுமுறை கிடையாது என்றும் அதற்கு பதிலாக ஞாயிற்றுக்கிழமை தான் விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
கடந்த சில மாதங்களாகவே லட்சத்தீவு விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது என்பதும் மத்திய அரசுக்கு கடும் கண்டனங்கள் ஏற்பட்டு வருகிறது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் லட்சத்தீவில் பல ஆண்டுகளாக கடைப்பிடித்து வந்த கடைபிடிக்கப்பட்டு வந்த வெள்ளிக்கிழமை விடுமுறை ரத்து என்று அறிவிக்கப்பட்டுள்ளது
வெள்ளிக்கிழமைக்கு பதிலாக ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாக அறிவித்து புதிய காலண்டர் வெளியிடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் விசுவரூபம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது