Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓபிஎஸ்-க்கு வேறு வழியே இல்லை: அதிமுக சின்னம் வழக்கின் தீர்ப்பு குறித்து தராசு ஷ்யாம்..!

Mahendran
வியாழன், 11 ஜனவரி 2024 (11:31 IST)
தனிச்சின்னம் பெற்று போட்டியிடுவதே ஓ.பன்னீர்செல்வத்துக்கு தற்போது கிடைக்கும் நிவாரணமாக இருக்கும் எனவும் அதைத் தவிர வேறு வழியே இல்லை என மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.
 
அதிமுக கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த தனி நீதிபதி விதித்த தடையை நீக்க முடியாது எனக்கூறி ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
 
அதிமுகவில் இருந்து நீக்கிய பிறகும் ஒருங்கிணைப்பாளர் என கூறிக்கொண்டு ஓ.பி.எஸ் கட்சியின் சின்னம், கொடி ஆகியவற்றை பயன்படுத்த கூடாது என எடப்பாடி பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ALSO READ: மாடுகளுக்கு பீர் கொடுத்து வளர்க்கும் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க்.. புதிய பிசினஸ் தொடக்கம்..!
 
இந்த நிலையில் இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த தராசு ஷ்யாம், ‘ஓரளவுக்கு எதிர்பார்த்த தீர்ப்புதான் இது எனவும், இதே அமர்வு இதற்கு முன்பும் இதேபோல தீர்ப்புகளைதான் வழங்கியுள்ளது எனவும், இனி தனிச்சின்னம் பெற்று போட்டியிடுவதே ஓ.பன்னீர்செல்வத்துக்கு தற்போது கிடைக்கும் நிவாரணமாக இருக்கும். அதைத் தவிர வேறு வழியே இல்லை என்றும் கூறினார்,
 
மேலும் பரிசுப்பெட்டி போல ஓபிஎஸ் தரப்புக்கும் உச்சநீதிமன்றம் தனிச் சின்னத்தை தரலாம் என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments