Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எந்த வாடி வாசலும் மூடப்படாது..! அமைச்சர் பி மூர்த்தி பேச்சு..!!

minister

Senthil Velan

, செவ்வாய், 9 ஜனவரி 2024 (15:54 IST)
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் கிழக்கு, மேற்கு, அலங்காநல்லூர் நகர்,பாலமேடு நகர், திமுக சார்பாக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
 
இந்த கூட்டத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி, சேலம் மாநாடு ,ஜல்லிக்கட்டு கலையரங்க மைதானம் திறப்பு விழாவிற்கு முதலமைச்சர் வருகை தொடர்பான ஆலோசனை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி மூர்த்தி, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்
 
அப்போது அமைச்சர் பி மூர்த்தி பேசுகையில், அலங்காநல்லூர் பகுதியில் ஒரு நினைவுச் சின்னம் உருவாக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் , தமிழ்நாடு சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் சிறப்பு அரசாணை வெளியிட்டார்.
 
ஜல்லிக்கட்டு நிகழ்வை போற்றும் வகையில் பாரம்பரிய பண்பாட்டை நினைவுபடுத்த கலையரங்க மைதானம் கட்டப்பட வேண்டும் என்று அறிவித்தார். இதனை அடுத்து, கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட ஜல்லிக்கட்டு கலையரங்க மைதானம் கட்டுமான பணிகள் நிறைவடைந்து திறப்பு விழா காணப்பட உள்ளது.
ALSO READ: அதிகாலை முதல் சாரல் மழை..! குளிர்ச்சியான சூழலுக்கு மாறிய கோவை..!!
 
இந்த ஜல்லிக்கட்டு கலையரங்க மைதானத்திற்கும் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம், போன்ற பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடக்கும்.  எனவே, அரசியல் ஆதாயத்திற்காக ஜல்லிக்கட்டு வாடிவாசல் மாற்றப்பட உள்ளதாக சிலர் பரப்பும் அவதூறு செய்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்
 
ஜல்லிக்கட்டை பார்க்க முடியாத பொதுமக்கள் ஜல்லிக்கட்டை கண்டு கழிக்க கூடிய வகையில் இந்த மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மைதானத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு கலாச்சார பண்பாட்டு கண்காட்சியாகவே நடைபெறும்.  அவதூறு தகவல்களை நம்ப வேண்டாம். ஆண்டாண்டு காலமாக அந்தந்த பகுதியில் நடைபெறக்கூடிய பாரம்பரிய நிகழ்வுகள் எந்த ஆண்டிலும் மாற்றப்படாத நிகழ்வாக நடைபெறும்.
 
அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம்  போன்ற அரசு விழாக்கள் எந்த காலத்திலும் தடையில்லாமல் நடைபெறும் என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிகாலை முதல் சாரல் மழை..! குளிர்ச்சியான சூழலுக்கு மாறிய கோவை..!!