Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக ஆதரவு இல்லாமல் இனி மத்தியில் ஆட்சி இல்லை: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

Webdunia
திங்கள், 3 செப்டம்பர் 2018 (07:34 IST)
பாராளுமன்ற தேர்தல் வரும் 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நிலையில் தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக இப்போதே நாடாளுமன்ற வியூகங்களை வகுக்க தொடங்கிவிட்டது. அதேபோல் மாநில கட்சிகளும் தங்கள் வலிமையை நிரூபிக்க தயாராகி வருகின்றன.

இந்த நிலையில் மத்தியில், இனிமேல், அதிமுக ஆதரவு கொடுக்கும் கட்சி மட்டுமே  ஆட்சி செய்ய முடியும் என்றும், அப்போது, கண்டிப்பாக, மத்திய அமைச்சர் பதவிகளை கேட்டுப்பெறுவோம் என்றும், பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியுள்ளார். பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்கும் என கருதப்படும் நிலையில் பாஜகவுக்கு விடுக்கப்பட்ட மறைமுக எச்சரிக்கையாகவே இந்த அறிவிப்பு கருதப்படுகிறது.

தற்போதைய மக்களவையில் திராவிட கட்சிகளின் எம்பிக்கள் யாரும் அமைச்சராக இல்லை என்பதும், பாஜகவை சேர்ந்த பொன்.ராதாகிருஷ்ணன் மட்டுமே தமிழகத்தில் இருந்து அமைச்சராக இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அடுத்த அமைச்சரவையில் காங்கிரஸ் மற்றும் பாஜக என எந்த கட்சி ஆட்சி அமைத்தாலும் திமுக அல்லது அதிமுகவை சேர்ந்த எம்பிக்கள் கணிசமான அளவில் மத்திய மந்திரிசபையில் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

குடியரசு தலைவரை சந்திக்கிறது இந்திய தேர்தல் ஆணைய குழு.. பெரும் பரபரப்பு..!

அதிமுகவினர் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்: சசிகலா, ஓபிஎஸ் வலியுறுத்தல்..!

பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறாரா அஜித் பவார்.. உள்ளே வருகிறார் உத்தவ் தாக்கரே..!

பிரதமர் மோடிக்கு திடீரென போன் போட்ட ஜோ பைடன், டிரம்ப், புதின் மற்றும் ரிஷி சுனக்.. என்ன காரணம்?

3வது முறையாக விண்வெளி பயணம் செய்தார் சுனிதா வில்லியம்ஸ்.. குவியும் பாராட்டுக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments