Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ம.நீ.ம கூட்டணியில் சமக போட்டியிடும் 40 தொகுதிகள் அறிவிப்பு

Advertiesment
40 constituencies t
, வெள்ளி, 12 மார்ச் 2021 (18:35 IST)
கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இடம்பெற்றுள்ள சரத்குமாரின் சமக போட்டியிடவுள்ள    40 தொகுதிகள் வெளியாகியுள்ளது
.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம்தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மே 2 ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என  சமீபத்தில் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
 
இதனால் தமிழக அரசியல்களம் சூடுபிடித்துள்ளது.திராவிட கட்சிகள் மற்ற கட்சிகளுடன் கூட்டணி குறித்தும் தொகுதிப் பங்கீடு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தி இதற்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுவருகின்றனர்.
 
இந்நிலையில், தேர்தல் கால நடைமுறைகள் சமீபத்தில் அமலுக்கு வந்த நிலையில், தமிழக தேர்தல் களம் பரபரப்புடன் காட்சியளிக்கிறது. அனைத்து கட்சியினரும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்
 
இந்நிலையில் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இடம்பெற்றுள்ள சரத்குமாரின் சமக போட்டியிடவுள்ள    40 தொகுதிகள் வெளியாகியுள்ளது.
 
அதில், திருச்செங்கோடு, அந்தியூர், கிருஷ்ணராயபுரம் (தனி), லால்குடி
 
திருச்செந்தூர், விருதுநகர், விளாத்திகுளம், தூத்துக்குடி, ஒட்டப்பிடாரம்( தனி), வாசுதேவநல்லூர்(தனி), தென்காசி, ஆலங்குளம், நெல்லை, அம்பாசமுத்திரம்
 
நாங்குநேரி, ராதாபுரம், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர்,கடலூர், சிதம்பரம், சீர்காழி(தனி), திருத்துறைப்பூண்டி(தனி), சிவகங்கை, மதுரை தெற்கு, பெரியகுளம்(தனி), ராஜபாளையம் ,துறைமுகம், உத்திரமேரூர், அரக்கோணம்(தனி), சோளிங்கர், ஆற்காடு, வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை போளூர், உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், ஆத்தூர்(தனி), சங்ககிரி, திருச்செங்கோடு, அந்தியூர், கிருஷ்ணராயபுரம்(தனி), லால்குடி ஆகிய தொகுதிகளில் போட்டியிடவுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தினகரன் பிடியில் தேமுதிக… கேட்ட தொகுதிகள் கிடைக்குமா?