Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திடீரென வேகமெடுத்த நிவர் புயல்: மணிக்கு 14 கிமீ வேகம் என தகவல்

Webdunia
புதன், 25 நவம்பர் 2020 (21:28 IST)
தமிழகத்தை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருக்கும் நிவர் புயல் தற்போது அதிக வேகத்தில் வந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
முதலில் மூன்று கிலோ மீட்டர் முதல் 5 கிலோ மீட்டர் வரை வேகத்தில் கரையை நெருங்கிக் கொண்டிருந்த நிவர் புயல் அதன்பிறகு 11 கிலோ மீட்டர் வேகத்தில் வந்தது. இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி நிவர் 14 கிலோமீட்டர் வேகத்தில் வருவதாகவும் திடீரென புயலின் வேகம் அதிகரித்துள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
தற்போதைய நிலவரப்படி கடலூருக்கு 80 கிலோ மீட்டர் தொலைவில் நிவர் புயல் இருப்பதாகவும் சென்னையில் இருந்து 160 கிலோ மீட்டர் தொலைவிலும் புதுவையில் இருந்து 85 கிலோமீட்டர் தொலைவிலும் நிவர் இருப்பதாக தெரிகிறது 
 
நிவர் புயலின் வேகம் திடீரென அதிகரித்துள்ளதால் கணிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னரே கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் எப்போது நிவர் புயல் கரையை கடந்தாலும் அதன் தாக்கங்களை சந்திக்க தமிழக அரசும் பேரிடர் படையினரும் தயார் நிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாத்மா காந்தி பாகிஸ்தானுக்கு தான் தேசத் தந்தை: பிரபல பாடகர் சர்ச்சை கருத்து..!

ஷேக் ஹசீனாவை எங்களிடம் ஒப்படையுங்கள்: இந்தியாவுக்கு கடிதம் எழுதிய வங்கதேச அரசு..!

மருத்துவ கழிவு கொட்டிய விவகாரம்: மாநில அரசை விளாசிய கேரள உயர்நீதிமன்றம்..!

BSNL நிறுவனத்திற்கு நிலுவைத்தொகை இல்லையா? அமைச்சரின் கருத்துக்கு அண்ணாமலை பதிலடி

தமிழகத்தில் டிசம்பர் இறுதி வரை மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments