Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கைலாசாவுக்கு ஆட்கள் தேவை! நித்தியின் பலே அறிவிப்பு!

Advertiesment
நித்யானந்தா
, செவ்வாய், 15 நவம்பர் 2022 (09:17 IST)
இந்தியாவில் தேடப்பட்டு வரும் குற்றவாளியான நித்தியானந்தா தனது கைலாசா தீவில் பணிபுரிய ஆட்கள் தேவை என அறிவிப்பை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் பல்வேறு பாலியல் புகார்கள் மற்றும் ஆட்கடத்தல் உள்ளிட்ட வழக்குகளில் தேடப்பட்டு வருபவர் சாமியார் நித்தியானந்தா. இந்தியாவிலிருந்து தப்பிய இவர் தற்போது எங்கே இருக்கிறார் என்பது மர்மமாகவே உள்ளது.

ஆனால் கைலாசா என்ற தீவு நாட்டை உருவாக்கியுள்ளதாக கடந்த சில ஆண்டுகள் முன்பிருந்து கூறி வரும் நித்யானந்தா, கைலாசா நாட்டிற்கான பாஸ்போர்ட், காசு போன்றவற்றை வெளியிட்டு வைரலாகி வந்தார். இந்த கைலாசா நாடும் எங்கிருக்கிறது என்று யாருக்கும் தெரியவில்லை.

இந்நிலையில் தற்போது கைலாசா நாட்டில் பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் தேவை என நித்தியானந்தா ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளாராம். அதில் பிளம்பர் தொடங்கி வெளியுறவுத்துறை வரை பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் தேவைப்படுவதாகவும் தங்கும் இடம், உணவு, பயிற்சி இலவசமாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இது நித்தியானந்தாவின் புதுவித மோசடியா என்ற கேள்வி எழுந்துள்ளதாம்.

Edit By Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கல்லூரி மாணவர்கள் சுட்டுக்கொலை! இந்த ஆண்டில் மட்டும் 600 சம்பவங்கள்?