Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Monday, 14 April 2025
webdunia

கரடியே கழுவி ஊத்திய மொமண்ட்: சீமானை பங்கமா வெச்சி செஞ்ச நித்தி!!

Advertiesment
நாம் தமிழர்
, புதன், 18 டிசம்பர் 2019 (19:01 IST)
ஸ்ரீ கைலாஷ் ஒன்றும் திறந்த மடம் அல்ல தமிழ் பிரிவினைவாதிகளை அனுமதிக்க என டிவிட் போட்டு சீமானுக்கு பதிலடி கொடுத்துள்ளது ஸ்ரீ கைலாஷ் பி.எம்.ஓ. 
 
சமீபத்தில் இந்திய குடியுரிமைச் சட்ட திருத்தம் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியாவின் பல மாநிலங்களில் மாணவர்கள் மற்றும் எதிர்க்கட்சியினர்   போராடி வருகின்றனர். 
 
இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துக்கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது... 
webdunia
தேசிய குடிமக்கள் பதிவேட்டின் மூலம் குடியுரிமை மறுக்கப்பட்டால் ஒரு கவலையும் இல்லை. நாங்கள் இந்திய குடியுரிமையற்றவனாக்கிவிட்டால் நித்யானந்தாவின் கைலாசா நாட்டுக்கு சென்று விடுவேன். எங்களுக்கு அதிபர் நித்யானந்தாவும் அவரது கைலாசா நாடும் இருப்பதாகவும் அவர் காமெடியாக பேசினார்.  
 
தற்போது இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், நித்யானந்தாவின் அதிகாரப்பூர்வ டுவிட்டராக கருதப்படும் பிஎம்ஒ கைலாஷ் பக்கத்தில் பதிவு ஒன்ரு போடப்பட்டுள்ளது. அதில் பதிவிடப்பட்டுள்ளது பின்வருமாறு... 
webdunia
ஸ்ரீ கைலாஷ் ஒன்றும் திறந்த மடம் அல்ல தமிழ் பிரிவினைவாதிகளை அனுமதிக்க. அரசியல் துறந்து திருவண்ணாமலை கோவிலில் தீபம் ஏற்றி, அன்னை மீனாட்சியின் பாதம் வணங்கினால் சீமானுக்கு குடியுரிமை வழங்க தயார் - பிரதமர் அலுவலகம், ஸ்ரீ கைலாஷ் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இது சமூக வலைத்தளங்களில் பலரின் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது. நித்தியானந்தாவே சீமான ஏத்துக்கல என்பது போல கலாய்க்கும் விதமாக பல கமெண்டுக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முடியலடா சாமி... நித்தியை பிடிக்க சிபிசி உதவியை நாடும் கர்நாடகா போலீஸ்!