Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குரங்கணி தீ விபத்து : மரணமடைந்த 9 பேரின் விபரம்

Webdunia
திங்கள், 12 மார்ச் 2018 (11:40 IST)
தேனி அருகே உள்ள குரங்கணி காட்டுப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

 
தேனி அருகே உள்ள குரங்கணி மலைப்பகுக்கு சென்னையை சேர்ந்த 27 பேரும், ஈரோட்டை சேர்ந்த 12 பேரும் இரு பிரிவுகளாக மொத்தம் 39 பேர் மலையேற சென்றனர். அந்நிலையில், நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் அவர்கள் சிக்கிக் கொண்டனர். உடனடியாக போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று 27 பேரை மீட்டனர். 
 
ஆனால், பதட்டத்தில் பள்ளத்தாக்கில் விழந்த 9 பேரை மீட்க முடியவில்லை. எனவே, அவர்கள் தீயில் சிக்கி பலியாகிவிட்டனர். அதில் 6 பேர் பெண்கள் என தெரியவந்துள்ளது. இதில், விஜயா, விவேக், தமிழ்ச்செல்வி ஆகியோர் ஈரோட்டை சேர்ந்தவர்கள். அதேபோல், அகிலா, பிரேமலதா, புனிதா, சுபா, அருண், விபின் ஆகியோர் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
 
தற்போது, 2 ஹெலிகாப்டர்கள் மூலம் இறந்தவர்களின் உடல்கல் மீட்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.. தவெக தலைவர் விஜய் அறிக்கை..!

5 ஆண்டுகளாக 60 பேர் பாலியல் வன்கொடுமை.. 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை..!

மீண்டும் உச்சம் செல்லும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 240 ரூபாய் உயர்வு..!

எக்கமா.. எக்கச்சக்கமா..! பொங்கலையொட்டி விண்ணை தொட்ட விமான டிக்கெட் விலை!

ஆட்டோ கட்டணம் உயர்வு.. தொழிற்சங்கத்தினர் அறிவிப்பை தமிழக அரசு ஆதரிக்குமா?

அடுத்த கட்டுரையில்
Show comments