Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குரங்கணி காட்டுத்தீ: பலியான 9 பேர் யார் யார்?

Webdunia
திங்கள், 12 மார்ச் 2018 (10:53 IST)
தேனி அருகே உள்ள குரங்கணி காட்டுப்பகுதியில் நேற்று முதல் கொளுந்துவிட்டு எரியும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு துறையினர் மற்றும் மீட்புக்குழுவினர் திணறி வருகின்றனர். இந்த நிலையில் இந்த மலையில் டிரெக்கிங் சென்ற சுமார் 40க்கும் மேற்பட்ட மாணவிகளை மீட்பதில் இந்திய விமானப்படை வீர்ர்கள் மற்றும் கமாண்டோ படையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று காலை 8 மணி வரை 8 பேர் பலியாகியிருந்த நிலையில் சற்றுமுன் வந்த தகவலின்படி பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.சென்னையை சேர்ந்த புனிதா, அருண், பிரேமலதா, சுபா, விபின் மற்றும் அகிலா ஆகியோர்களும், ஈரோட்டை சேர்ந்த விஜயா, விவேக், மற்றும் தமிழ்ச்செல்வி ஆகியோர்கள் பலியானவர்கள் என்று தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.  அதுமட்டுமின்றி ஒருசிலர் ஆபத்தான நிலையில் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இந்த தீவிபத்து குறித்தும், தீயில் சிக்கியவர்களின் நிலை குறித்தும் தகவல் தெரிந்து கொள்ள 9445000586 மற்றும் 9994793321 ஆகிய இரண்டு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments