Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிலோபர் கபில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதன் பின்னணி இதுதானா!

Webdunia
திங்கள், 24 மே 2021 (08:10 IST)
அதிமுக முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதன் பின்னணி என்ன என்பது வெளியாகியுள்ளது.

சில தினங்களுக்கு முன்னர் அதிமுக முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டார். இது குறித்து வெளியான அறிக்கையில் ‘கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தாலும், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் நிலோபர் கபில் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என கேட்டுக் கொள்கிறோம்’ எனக் கூறப்பட்டு இருந்தது.

இந்நிலையில் நிலோபர் செய்தியாளர்களை சந்தித்த போது ‘நான் திமுக எம் எல் ஏ ஒருவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்ததால் நான் திமுகவில் சேரப்போவதாக நினைத்து கட்சியில் இருந்து நீக்கியுள்ளார்கள். அதற்காக எனக்கு ஒரு நோட்டீஸ் கூட அனுப்பவில்லை. எனது உதவியாளர் பிரகாசம் என்பவர் பணம் பெற்றாரா என்பது பற்றி எனக்கு தெரியாது. அவர் மேல் போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நான் திமுகவில் சேருவேனா இல்லையா என்பது உங்களுக்கு விரைவில் தெரிய வரும்’ எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்டாகிராமில் வந்த லிங்க்: க்ளிக் செய்த அடுத்த நிமிடத்தில் பணத்தை இழந்த இளம்பெண்..

ஸ்டெர்லைட் தடையை மறுஆய்வு செய்ய கோரிய மனு : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பாஜக பயப்படுகிறது.. காங்கிரஸ் பிரமுகர் விமர்சனம்..!

மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய இளைஞரின் தாய் மீது புகார்.. நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஐதராபாத்தில் தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கியிருக்கின்றாரா கஸ்தூரி? தனிப்படை விரைவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments