காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் தேர்வு: கே.எஸ்.அழகிரி

Webdunia
திங்கள், 24 மே 2021 (07:41 IST)
காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் தேர்வு: கே.எஸ்.அழகிரி
தமிழக காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் தேர்வில் இழுபறி இருந்த நிலையில் தற்போது ஒரு மனதாக காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்வு செய்யப்பட்டதாக தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கேஎஸ் அழகிரி அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
தமிழக காங்கிரஸ் கட்சி சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது இருப்பினும் சட்ட மன்ற தலைவர் தேர்வு நடைபெறாமல் இழுபறியாக இருந்தது. இரண்டு முறை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் கூடியும் தலைவர் தேர்வில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை இதனால் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்வு தள்ளி போய்க்கொண்டே இருந்தது 
 
இந்த நிலையில் நேற்று காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ செல்வபெருந்தகை தலைவராகவும் ராஜேஷ்குமார் துணை தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கே எஸ் அழகிரி அவர்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் டுவிட்டரில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவராக  நியமிக்கப்பட்டுள்ள திரு 
செல்வப்பெருந்தகை  அவர்களுக்கும், துணைத் தலைவராக திரு ராஜேஷ்குமார் அவர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை: ஆட்சியர்களுக்கு அரசு முக்கிய அறிவுறுத்தல்கள்

19 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது.. கிராம பஞ்சாயத்து தலைவர் வேடத்தில் இருந்ததாக தகவல்..!

ஒபாமா மனைவியின் புதிய போட்டோஷூட்.. இவ்வளவு ஒல்லியாக மாறியது எப்படி? நெட்டிசன்கள் சந்தேகம்..!

ரூ.2,500 கோடி கொகைன் கடத்தல்: துபாய்க்கு தப்பியோடிய முக்கிய குற்றவாளி கைது! இந்தியாவுக்கு நாடு கடத்தலா?

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள்.. கால நீட்டிப்பு வழங்கப்படாது..!

அடுத்த கட்டுரையில்
Show comments